நான் சொன்னது மனோரமா ஆச்சியைதாங்க- செல்லூர் ராஜூ சமாளிப்பு
நான் சொன்னது காரைக்குடி ஆச்சிகளை அல்ல, மனோரமா ஆச்சியைதான் என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Recommended Video

மதுரை: நான் காரைக்குடி ஆச்சிகளை பற்றி கூறவில்லை, மனோரமா ஆச்சியைதான் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
காலா பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, நதி நீர் இணைப்புதான் எனது வாழ்நாள் கனவு என்றும் நேரம் வரட்டும் ஆண்டவன் துணையுடன் மக்கள் ஆதரவுடன் தமிழகத்தில் நல்ல நேரம் பிறக்கும் என்றும் பேசியிருந்தார். இதுகுறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதிலளிக்கையில், நதி நீர் இணைப்பு குறித்து ரஜினி கூறியது வரவேற்கத்தக்கது. ஆனால் தமிழகத்தில் அவரால் ஆட்சியை பிடிக்க முடியாது. வேண்டுமென்றால் காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாம் என்று கூறியிருந்தார்.
இது நகரத்தார் சங்கம் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. திருமணமான பெண்களை ஆச்சி என்று அழைக்கும் மரியாதைக்குரிய வார்த்தையை அமைச்சர் கேலி செய்துள்ளார் என்று காரைக்குடி நகரத்தார் சங்கத்தினர் அமைச்சருக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தினர்.
இந்நிலையில் ஒரு தொலைகாட்சி சேனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடம் ஆச்சி குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது. அப்போது அமைச்சர் கூறுகையில் நான் சொன்னது காரைக்குடி ஆச்சியை அல்ல, ரஜினியுடன் சேர்ந்து நடித்த மனோரமா ஆச்சியைதான் என்று பிளேட்டையே திருப்பி போட்டார்.


Click it and Unblock the Notifications
