சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பு விழா: விடைபெற்றார் ஆளுநர் வித்யாசாகர்!
தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவுக்கு சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பு விழா நடைபெற்றது.
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் விடைபெற்றார். மும்பை புறப்பட்ட அவருக்கு சென்னை விமான நிலையத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.
தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து மகாராஷ்டிரா ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் தமிழக பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி முதல் வித்யாசாகர் ராவ் தமிழக பொறுப்பு ஆளுநராக பதவி வகித்த வந்தார்.

ஓராண்டுக்குப் பிறகு தமிழகத்துக்கு புதிய ஆளுநராக மேகாலயா ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை குடியரசுத் தலைவர் அண்மையில் அறிவித்தார். இதையடுத்து பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மும்பை புறப்பட்டார்.
அவருக்கு சென்னை விமான நிலையத்தில் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று சென்னை வரவுள்ளார். தமிழக ஆளுநராக அவர் நாளை பதவி ஏற்கவுள்ளார்.
-
அரசு ஊழியர்களுக்கு விரைவில் குட் நியூஸ்? 21 மாத கோடிக்கணக்கான நிலுவை தொகையில் தமிழக அரசு முடிவு? -
24 மணி நேரம்தான் டைம்! அரசு ஆபீசிலும் காசு தர வேண்டாம்! இறப்புச் சான்றிதழ் பெற ரூட் போட்ட தமிழக அரசு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications