அச்சன்கோவிலில் இன்று மஹோற்சவ விழா - குவியும் அய்யப்ப பக்தர்கள்
தென்காசி: செங்கோட்டை அருகே உள்ள அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோயிலில் 11 நாள் நடைபெறும் மஹோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
செங்கோட்டை மேக்கரை அருகே கேரள எல்லையில் அச்சன்கோவிலில் ஸ்ரீதர்மசாஸ்தா கோயில் அமைந்துள்ளது.
இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மஹோற்சவ விழா மிக சிறப்பாக நடப்பது வழக்கம்.

கொடியேற்றத்துடன் துவக்கம்:
இந்த ஆண்டு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தங்க கொடி மரத்தில் தந்திரி கொடியேற்றி சிறப்பு பூஜைகளை நடத்தி வருகிறார்.

பல கோடி ரூபாய் ஆபரணங்கள்:
திருவிழாவிற்காக புனலூர் கருவூலத்திலிருந்து பலத்த பாதுகாப்புடன் ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக பல கோடி ரூபாய் மதிப்புள்ள திரு ஆபரணங்கள் எடுத்து வரப்பட்டன.

தீபாராதனை விழா:
இவை இன்று சுவாமிக்கு சாத்தப்பட்டு தீபாராதனை நடக்கிறது. விழாவில் தினமும் அன்னதானம் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இம்மாதம் 25 ஆம் தேதி நடக்கிறது.

தங்க வாள் உற்சவம்:
தேர் வெளிப்பிரகாரத்தை சுற்றி வலம் வரும்போது தேருக்கு முன்பு ஐயப்பனின் தங்க வாளை கோயில் நிர்வாக அதிகாரி ஊர்வலமாக எடுத்து வருவார். தொடர்ந்து தேருக்கு முன்பு பிரகாரத்தில் வைத்து கருப்பன் துள்ளல் நிகழ்ச்சி நடக்கிறது.

கருப்பன் துள்ளல் நிகழ்ச்சி:
இதில் கேரளம் மட்டுமின்றி தமிழகத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். விழாவில், வரும் 26 ஆம் தேதி ஆராட்டு விழா, 27 ஆம் தேதி மஹோற்சவ திருவிழா நிறைவு விழா நடக்கிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications