செங்கோட்டை - புனலூர் அகல ரயில் பாதையில் புதிய குகை அமைக்கும் பணி தீவிரம்
செங்கோட்டை: செங்கோட்டை - புனலூர் இடையேயான அகல ரயில் பாதையில் புதிய குகை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் இடையேயான செங்கோட்டை - புனலூர் அகல ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 80 சதவிகித பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

இந்நிலையில் இந்த தடத்தில் புதியதாக ஆறாவது குகை அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2015 ஏப்ரலில் இதற்கான ஒப்பந்த்த புள்ளியை வெளியிட்டது ரயில்வே வாரியம். இந்த பணியை தனியார் நிறுவனம் தொடங்கியது. ஏற்கனவே இருக்கும் குகைகள் தமிழக எல்லை பகுதிக்குள், 13 கி.மீ., தூரம் அமைந்துள்ளது. அதேபோல் கேரள மாநில பகுதிக்குள், 36.38 கி.மீ., தூரம் கொண்டதாக செல்கிறது. ஏற்கனவே 60 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது.
இந்த பாதையில், ஐந்து குகைகள் உள்ளன. இவற்றில் சுமார் 80 சதவிகித பணிகள் நிறைவு பெற்றுள்ளன. தற்போது புதியதாக அமைக்கப்படும் குகையானது ஆரியங்காவு - தென்மலை இடையே, மூன்றாவது குகையில் இருந்து, 100 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டு வருகிறது.

செங்கோட்டை புனலூர் அகல ரயில் பாதைக்காக புதிய குகை அமைக்கும் பணியும் தீவிரம் அடைந்துள்ளது. இன்னும் ஓரிரு மாதத்தில் முழுமையான பணிகள் முடிவடையும் என்று கூறப்படுகிறது. செங்கோட்டை - புனலூர் அகல ரயில் பாதை பணி தற்போது முழுமையாக 80 சதவிகிதத்தை எட்டியுள்ளது. இன்னும் 5 முதல் 6 மாதத்திற்குள் பணியை முடித்து 2017 ஆம் ஆண்டு துவக்கத்தில் இந்த தடத்தில் ரயிலை இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications