ஓட்டுக்கு பணம் தருவோரை பார்த்து அழுகை வருகிறது.. சிவகாசி முதியவரின் ஆதங்கம்
சென்னை: சிவகாசியில் மழைக்கு நடுவே, ஆறுமுகம் என்ற மூட்டு வலியால் பாதிக்கப்பட்ட முதியவர், இரும்பால் ஆன நான்கு கால் கைத்தடியை பயன்படுத்தி 2 கி.மீ நடந்து சென்று வாக்களித்துள்ளார். இந்த தூரத்தை கடக்க இரண்டரை மணி நேரம் ஆகியுள்ளது அவருக்கு.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஓட்டோட அருமை பெருமையை உணர்ந்தவன் நான். என்னோட ஓட்டுக்கு பணம் கொடுக்க வந்தாங்ககிட்ட நான் வாங்க மாட்டேன்னு சொல்லிவிட்டேன். அந்தக் காலத்துல வெள்ளைக்காரன்கிட்ட பணம் கொடுத்தா விடுதலை வாங்கினாங்க? அடிபட்டாங்க.. உதைபட்டாங்க, உயிரையும் விட்டாங்க.

விடுதலையோட மதிப்பு இப்போ உள்ள மக்களுக்கு தெரியவில்லை. அதனாலத்தான், நாட்டை பற்றி கவலைப்படாமல், ஓட்டுக்கு விலை வைத்துள்ளனர். பெற்ற தாயை ஒருத்தன் அவமானப்படுத்தினா, பிள்ளை பார்த்துக்கொண்டிருக்க மாட்டான். ஆனால், வீட்டுக்கு வீடு ஓட்டுக்கு பணம் கொடுத்து நாட்டையே தலை குனிய வச்சிருக்காங்க.
என் உடம்பில் தெம்பு இருந்திருந்தால் பணம் தர வந்தவர்களை அடித்திருப்பேன். நாட்டை நாசமாக்கிட்டாங்களேன்னு எனக்கு அழுகைதான் வந்தது. அந்தக் கோபத்தை மனசுக்குள்ள வச்சிக்கிட்டுத்தான் ஓட்டு போட்டேன்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications