இனி நான் ஏசி இல்லை.. உன் பாய் பிரண்ட்! போலீஸ் அதிகாரியின் 'வாட்ஸ் அப்' பேச்சு வரிக்கு வரி இதோ..!
சென்னை: ஆயுதப்படை பெண் கான்ஸ்டபிளிடம் உதவி போலீஸ் கமிஷனர் ஒருவர் ஜொள்விட்டபடி பேசுவது வாட்ஸ் அப்பில் தீயாய் பரவி வருகிறது.
இந்த ஆடியோவில், தன்னை சார்.. என்று கூப்பிட வேண்டாம் என்று சிணுங்குகிறார் அந்த ஏசி. இனிமேல், நான் ஏசி கிடையாது, உன் பாய் பிரண்ட் என்றும் வழிகிறார். அப்படியே, போக்கிரி படத்தில் வரும் வில்லன் போலீஸ் அதிகாரி டயலாக் இது.

அப்படி என்னதான் அந்த உரையாடலில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள பலருக்கும் ஆர்வம் இருக்கும். அந்த வாட்ஸ் அப் டயலாக் அப்படியே உங்கள் பார்வைக்கு இதோ..
பெண் கான்ஸ்டபிள்: ஹலோ.. கட்டாயிடுச்சி. இங்க ஆள் வந்தாங்க அதான் கட் பண்ணிட்டேன்.
அதிகாரி: என்னடா இப்படி கஷ்டப்படுத்துற.. உன்ன பாத்தது முதல், மூனு, நாலு மாசமா பேசனும்.. பேசனும்னு டிரை பண்ணுனேன். உன் நம்பரையாவது டிரேஸ் பண்ணலாம்னா, மற்ற கழுதைங்க நம்பரெல்லாம் இருக்குது, உன் நம்பர் மட்டும் கிடைக்கலை.
பெண் கான்ஸ்டபிள்: சொல்லுங்க சார்..
அதிகாரி: மறுபடியும் சாரா.. என்ன உன் ஃபிரெண்டா ஏத்துக்க மாட்டியா? ஏன் சார்.. சார்ங்கிற
பெண் கான்ஸ்டபிள்: அப்படியே பழகிடுச்சி..
அதிகாரி: பழக வேணாம், புதுசா பழகிக்க... நிஜமாவே 2 குழந்தைங்க இருக்கா உனக்கு? என்ன பேரு..
பெண் கான்ஸ்டபிள்: (குழந்தைகள் பெயரை சொல்கிறார்)
அதிகாரி: உன் வீட்டுக்காரர் (கணவர்) என்னைவிட அழகா இருப்பாரா?
பெண் கான்ஸ்டபிள்: ம்ம்..
அதிகாரி: நிஜமாவா, ஒரு போட்டோ இருந்தா, வாட்ஸ் அப்பில் எனக்கு அனுப்பி வை..
பெண் கான்ஸ்டபிள்: யாரு போட்டோவ?
அதிகாரி: உன் போட்டோ, உன் வீட்டுக்காரர் போட்டோ, உன் குழந்தைகள் போட்டோவையெல்லாம் அனுப்பி வை, ஓ.கே.வா?
பெண் கான்ஸ்டபிள்: ம்ம்..
அதிகாரி நெட் இருக்கா உன்கிட்ட?
பெண் கான்ஸ்டபிள்: இருக்கு.
அதிகாரி: என் வாட்ஸ் அப் நம்பர எழுதிக்க..
பெண் கான்ஸ்டபிள்: என்கிட்ட பேனா இல்லையே.. (சிறிது வினாடிகள் கழித்து), ம்..சொல்லுங்க
அதிகாரி: (நம்பரை சொல்கிறார்) இந்த நம்பரில் அனுப்பி வை. பெரிய டேப்லெட்ல உன் போட்டோ நல்லா தெரியும். உன் அழகான முகத்த இதில் அனுப்பி விடு.. இனிமேல் நானும் உனக்கு பிடிக்கனும், சரியா? சனிக்கிழமை உங்க ஊருக்கு போனீயே, எது உங்க ஊரு, பெரியபாளையமா?
பெண் கான்ஸ்டபிள்: ராஜபாளையம்.
அதிகாரி: அவ்வளவு தூரம் எப்படி ஒரே நாளில் போய்ட்டு வருவ?
பெண் கான்ஸ்டபிள்: நைட் டிரைன் ஏறினா, காலையிலே போயிடுவேன், மறுபடி நைட் ஏறி, காலையில் டூட்டிக்கு வருவேன்.
அதிகாரி: தனியாவே போவியா, பரவாயில்லை.. அப்போ நாம எங்காவது ஒருநாள் தனியா போகலாம்.
பெண் கான்ஸ்டபிள்: (சிறிது நேரம் அமைதியாக இருக்கிறார். மீண்டும் அதிகாரி, போகலாமா என கேட்டதும் ம்ம் என்கிறார்).
அதிகாரி: ப்பா, எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா, நீ இப்படி பேசுறது. நீ நல்ல அழகா இருக்க.. டிரெஸ்செல்லாம் இனிமே டைட்டா போடாத, பார்க்கிறவனெல்லாம் கண்ணு வைப்பான். கொஞ்சம் லூசா போடு. அன்னிக்கு சுடிதாரில் சூப்பரா இருந்த.. பொடவ கட்டினால் இன்னும் அழகா இருப்ப. பொடவ கட்டினாதான் பெரிய பொம்பள மாதிரி இருப்பல்ல.. சூப்பரா இருக்க தங்கம். நீ என்கிட்ட அடிக்கடி பேசனும். நான் 'ஏசி'ங்கிறத மறந்துடு, இனிமேல் நான் உன் பாய் பிரண்ட். உனக்கு என்ன வேணும்னாலும் கேளு, என்ன ஹெல்ப் வேணும்னாலும் கேளு. அப்புறம் என்னிக்காவது ஒருநாள் எங்கையாவது போவோமா?
பெண் கான்ஸ்டபிள்: என்கிட்ட புள்ளைங்க இருக்காங்க. தனியா பேசுனா கூப்பிட்டுகிட்டே இருக்காங்க. போட்டுமா?
அதிகாரி: சரி சாப்பிடும்போது பேசு.. ஒன்னு கொடுக்கட்டுமா?
பெண் கான்ஸ்டபிள்: (திடுக்கிட்டபடியே) என்னது?
அதிகாரி: (சிரித்தபடியே) என்ன கொடுக்க முடியும் போன்ல... சரி ஃபிரியா இருக்கும்போது பேசு, பாய்டா..
இப்படி முடிகிறது அந்த வாட்ஸ் அப் பேச்சு.. என்ன கொடுமை சார் இதெல்லாம்?












Click it and Unblock the Notifications