கருணாநிதி உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் விசாரித்த தினகரன் வக்கீல் அபிஷேக் சிங்வி
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை தினகரன் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி சந்தித்து கருணாநிதியின் உடல்நலன் குறித்து விசாரித்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் சிங்வி அவரது இல்லத்தில் சந்தித்து திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தினகரன் தரப்பு வழக்கறிஞராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் அபிஷேக் சிங்வி ஆஜராகி இருந்தார்.

இதனிடையே திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் அபிஷேக் சிங்வி நேரில் சந்தித்தார். அப்போது திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் அபிஷேக் சிங்வி விசாரித்தார்.












Click it and Unblock the Notifications