ஸ்டாலினிடம் இருந்து விலகிப் போகும் சீனியர்கள்... ஓஎம்ஜியின் ஆதிக்கத்தால் குமுறல்!
திமுகவின் 2-ம் கட்ட தலைவர்களை ஸ்டாலினிடம் இருந்து ஒதுக்கி வைப்பதில் அவரது குடும்ப நபர்களே தீவிரமாக இருக்கின்றனராம். இதனால் சீனியர் தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனராம்.
சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் இருந்து பல சீனியர்கள் ஒதுங்கி செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு காரணமே திமுகவினரால் ஓஎம்ஜி- ஒன்மேன் குரூப் என விமர்சிக்கப்படும் ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய நபர்தானாம்.
திமுக தலைவர் கருணாநிதி எப்போதும் இரண்டாம் கட்ட தலைவர்களுடனேயே வலம் வருவார்.. அவரது காரிலும் கூட 2-ம் கட்ட தலைவர்கள் பயணிப்பர்.
மு.க.ஸ்டாலினும் கூட இதே பாணியைத்தான் பின்பற்றி வந்தார். குறிப்பாக திருவண்ணாமலை, விழுப்புரம், காட்பாடி சீனியர்கள் ஸ்டாலினுடன் வலம் வருவது வழக்கம்.

தொடரும் விலகல்கள்
அண்மைக்காலமாக அடுத்தடுத்து இந்த சீனியர்களை ஸ்டாலினுடன் பார்க்க முடிவதில்லை. அதுவும் திருவண்ணாமலைக்காரர் அடுப்பங்கரை அமைச்சரவையிடம் செல்வாக்கு பெற்ற நபர். ஆனால் அவரே ரொம்பவே ஒதுங்கிப் போய்விட்டாராம்.

அதிருப்தியில் விழுப்புரத்தார்
அதேபோல் விழுப்புரத்துக்காரர் ஸ்டாலினிடன் ஏதோ ஒன்றை விவாதிக்க முயற்சித்திருக்கிறார். அதை தமது குடும்பத்து ஓஎம்ஜியிடம் பேசிவிடுங்களேன் என கூறினாராம் ஸ்டாலின். இதில் விழுப்புரத்துக்காரரும் படுஅப்செட்டாம்.

திமுக பலமே இதுதானே
கருணாநிதி நலமுடன் இருந்தபோது கூட 2-வது கட்ட தலைவர்கள் சொல்வதை கேட்பார்... அது பிடிக்கவில்லையென்றால் கூட நாசூக்காக கலாய்த்துவிடுவார்... புறக்கணித்தது இல்லை. திமுகவைப் பொறுத்தவரையில் அதன் பலத்தில் முக்கியமாக இருப்பது இரண்டாம் கட்ட தலைவர்கள்தான்.

ஜெ. பாணியா?
ஆனால் ஜெயலலிதா பாணியில் 2-ம் கட்ட தலைவர்கள் இல்லாத ஒரு நிலையை ஸ்டாலின் குடும்பத்தினர் உருவாக்க முயற்சிக்கிறார்கள்... இது திமுகவின் எதிர்காலத்துக்கு நல்லதே அல்ல என குமுறுகின்றனர் சீனியர் தலைவர்கள்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications