முதுபெரும் ஜனதா தளத் தலைவர் ஜி.ஏ. வடிவேலு காலமானார்!!
தருமபுரி: முதுபெரும் சோஷலிஸ்ட் மற்றும் ஜனதா தளம் தலைவரான ஜி.ஏ. வடிவேலு காலமானார். அவரது உடலுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.
தருமபுரி மாவட்டம் அன்னசாகரம் கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜி.ஏ.வடிவேலு. அவருக்கு வயது 91.
1925ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி பிறந்தவர் ஜி.ஏ. வடிவேலு, 12-6-1925 ம் ஆண்டு பிறந்தார். தொடக்க காலத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றினார்.

ஆனால் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தம்முடைய பணியை ராஜினாமா செய்தார். தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியிலும் பின்னர் லோகியா தலைமையிலான சோஷலிஸ்ட் கட்சியிலும் தீவிரமாக பணியாற்றியவர் ஜி.ஏ. வடிவேலு,
ஜனதா தளம் கட்சின் மாநிலத் தலைவராகவும் அதன் அகில இந்திய துணை தலைவராகவும் பணியாற்றினார் வடிவேலு. 2002-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் அவர் இணைந்தார்.
முதுபெரும் சோஷலிஸ்ட் தலைவரான வடிவேலு, முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் தருமபுரியில் காலமானார். அவரது உடலுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். ஜி.ஏ. வடிவேலு மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications