ரஜினியின் தனிக்கட்சி... 'தகதக' தமிழக அரசியல் கட்சிகள்- சிதறி சின்னாபின்னமாகும்!
தனிக்கட்சி தொடங்கும் ரஜினிகாந்துடன் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் கை கோர்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்க உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பீதியில் உறைந்து போயுள்ளதாகவே கூறப்படுகிறது. திமுக, காங்கிரஸ் உட்பட பல கட்சிகளில் அதிருப்தியில் இருக்கும் தலைவர்கள் ரஜினி கட்சிக்கு தாவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக அரசியலில் கால்நூற்றாண்டு காலமாக வருகிறேன்... வருகிறேன் என போக்கு காட்டி வந்த ரஜினிகாந்த் இப்போது களம் அமைத்துவிட்டார்... தனிக்கட்சி தொடங்கி அரசியலில் இறங்குவதில் படுமும்முரமாக இருக்கிறார் ரஜினிகாந்த்.

ஜூலை அல்லது டிசம்பரில்?
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்பட்டால் தமது அரசியல் பிரவேசத்தையும் ரஜினி அப்போது அறிவிக்கலாம். அல்லது டிசம்பர் 12-ந் தேதி தமது பிறந்த நாளின் போது அரசியல் பிரவேசமான போர் பிரகடனத்தை ரஜினி வெளியிடலாம்.

பாஜகவில் சேராதீங்க...
தனிக்கட்சி தொடங்குவதில் உறுதியாக இருக்கும் ரஜினிகாந்துடன் இப்போது திமுக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் அதிருப்தி தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இவர்களைப் பொறுத்தவரையில் பாஜகவில் மட்டும் சேராதீங்க... அந்த கட்சியை கூட்டணியில் மட்டும் சேர்த்து கொள்ளலாம் என்பதுதான் பிரதான கோரிக்கை.

அதிருப்தி கோஷ்டிகள்
இதனால்தான் ரஜினிகாந்த் பாஜகவில் இணைவதில்லை என திடமான முடிவில் இருக்கிறாராம். திமுகவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அதிருப்தி கோஷ்டி இருக்கிறது.. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை கோஷ்டிகளுக்கும் அதிருப்திகளுக்கும் பஞ்சமே இல்லை.

பீதியில் கட்சி தலைவர்கள்
இதுபோல பிற கட்சிகளில் அதிருப்தியில் இருக்கும் தலைவர்கள் பலரும் ரஜினிகாந்துடன் கை கோர்ப்பதில் மும்முரமாக இருக்கின்றனர். குறிப்பாக திமுக, காங்கிரஸின் மூத்த தலைவர்கள் சிலர் ரஜினி கட்சிக்கு தாவக் கூடும் என்பதால் பீதியில் உறைந்து போயுள்ளனர் அக்கட்சி தலைவர்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications