ஓ.பி.எஸ், நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், முனுசாமி.. நைஸாக உள்ளே புகுந்த செந்தில் பாலாஜி!

Subscribe to Oneindia Tamil

கரூர் : அதிமுகவில் அம்மாவுக்கு அடுத்த இடத்தில் செம கெத்தாக இருந்து வரும் நால்வர் அணியில் நைஸாக ஒருவர் நுழைந்துள்ளாராம். அவரது செல்வாக்குதான் இப்போது லேட்டஸ்டாக கட்சியினர் மத்தியில் பேசப்படும் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

அந்த நைஸ் நபர் வேறு யாருமல்ல, செந்தில் பாலாஜிதான். போக்குவரத்து அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு ஆரம்பத்திலிருந்தே அம்மாவிடம் தனி செல்வாக்கு இருந்து வருகிறது. எத்தனையோ அமைச்சர்கள் இருந்த இடமே தெரியாமல் தூக்கி வீசப்பட்ட நிலையில் செ.பா. மட்டும் செமையாக உட்கார்ந்திருக்கிறார்.

இப்போது அதிமுகவின் நால்வர் அணிக்குள் இவரும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளாராம்.

சர்வ அதிகாரம் ஜெ.விடம்தான்

சர்வ அதிகாரம் ஜெ.விடம்தான்

அதிமுகவை பொருத்தவரை அதன் பொதுச் செயலாளரான ஜெயலலிதா தான் சர்வ அதிகாரம் படைத்தவர்.

அடுத்து நான்கு தலைகள்

அடுத்து நான்கு தலைகள்

அடுத்த நிலையில், அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், முனுசாமி ஆகியோர் உள்ளனர்.

அம்மா நினைப்பதை இவர்கள் செய்வார்கள்

அம்மா நினைப்பதை இவர்கள் செய்வார்கள்

கட்சியில் முதல்வர் செய்ய நினைக்கும் காரியங்களை எல்லாம் இவர்கள் வசம் தான் சமீப காலமாக ஒப்படைத்து வந்தார். இதனால் அதிமுகவினர் மத்தியில் இந்த நால்வர் அணிக்கு தனி மரியாதை ஏற்பட்டது.

அம்மா போகும் பாதையில்...

அம்மா போகும் பாதையில்...

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு முதல்வர் ஜெயலலிதா செல்லும் போது, இந்த நால்வர் அணிதான் கூடவே போய்க் கொண்டிருக்கிறது.

வியூகம், மேடை போடுதல், கூட்டம் கூட்டுதல்...

வியூகம், மேடை போடுதல், கூட்டம் கூட்டுதல்...

அவ்வாறு செல்லும் இந்த அணி, கட்சி நிர்வாகிகளுக்கு முதல்வர் உத்தரவு, தேர்தல் வியூகம் , வேட்பாளர்கள் செயல்பாடுகள் போன்றவற்றை சொல்லி நடைமுறைபடுத்தி வருகின்றனர். மேடை போடுவதிலும் இவர்கள் ஓ.கே சொன்னால்தான் உண்டு.

அவ்வப்போது எஸ் ஆகும் வைத்தியலிங்கம்

அவ்வப்போது எஸ் ஆகும் வைத்தியலிங்கம்

இந்த நிலையில், இந்த நால்வர் அணியில் சமீப காலமாக அமைச்சர் வைத்தியலிங்கம், தனது தொகுதியில், திமுக சார்பில் முன்னாள் திமுக மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு நிற்பதால், அதிமுக வேட்பாளர் வெற்றிக்காக அதிக கவனம் செலுத்தி வருகின்றாராம். இதற்காக , முதல்வரிடம் முன் அனுமதி பெற்று தஞ்சைக்கு பறந்து விடுகின்றராம்.

கேப்பில் கிடா வெட்டிய செ.பா.

கேப்பில் கிடா வெட்டிய செ.பா.

இந்த கேப்பில் தற்போது புகுந்து விட்டாராம் செந்தில் பாலாஜி. இவரும் தற்போது முதல்வரின் டூர் புரோகிராமில் ஒரு நபராக இடம் பெற்று வருகிறாராம்.

இதுக்கேவா..

இதுக்கேவா..

இதையடுத்து உற்சாகமான செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள், நால்வர் அணிக்குள் புகுந்த அண்ணன் செந்தில் பாலாஜியை வாழ்த்தி சக ஆதரவாளர்களிடைேய ஸ்வீட் கொடுத்தெல்லாம் மகிழ்ந்து வருகிறார்களாம்...

எப்படியெல்லாம் இருக்குபா அரசியல்....

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+