செந்தில் பாலாஜி ரெய்டு.. குற்றம் செய்யவில்லை என்றால்.. திமுகவினர் தடுப்பது ஏன்? சீமான் கேள்வி
சென்னை: செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகளை சோதனை நடத்த விடாமல் திமுகவினர் தடுப்பது ஏன்? என்றும், குற்றம் செய்யவில்லை என்றால் அதிகாரிகளை தடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது ஒரு சில இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகளை சோதனை நடத்த விடாமல் திமுகவினர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் செய்யவில்லை என்றால் வருமான வரித்துறை அதிகாரிகளை சோதனை செய்யவிடாமல் திமுகவினர் தடுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
என் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தினால் வருமான வரித்துறையினர் தான் பணம் தர வேண்டியிருக்கும். குற்றம் செய்யவில்லை என்றால் அதிகாரிகளை தடுக்க வேண்டிய அவசியம் இல்லை. செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகளை சோதனை நடத்த விடாமல் திமுகவினர் தடுப்பது ஏன்? சோதனை செய்ய விடாமல் தடுக்கப்படும் போது தவறு இருப்பது போல வெளியில் தெரிகிறது.

வருமான வரி சோதனை கண் துடைப்பு நடவடிக்கை. காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் இது போன்ற நெருக்கடிகள் கொடுக்கப்பட்டது. தேர்தல் நெருங்கும் போது தற்போது பாஜக அனைவரையும் மிரட்டுகிறது. நாட்கள் நெருங்க நெருங்க அனைவரையும் மிரட்ட வேண்டியதுதான்.
எவ்வளவு ஆவணங்கள் எடுக்கப்பட்டது.. எவ்வளவு சொத்து மதிப்பு உள்ள ஆவணங்கள் எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியிடுவது இல்லை. அங்கே ஒரு பேரம் நடக்கிறது. அமலாக்கத்துறைக்கு மட்டும் தான் இவர்கள் பயப்படுகிறார்கள். விஜய் வீட்டில் 2 நாள் சோதனை நடத்தி விட்டு எல்லா கணக்கையும் சரியாக வைத்து இருக்கிறார் என்று சொன்னார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications