'புத்திசாலி' விஜயகாந்த்துக்குக் 'கனி' கொடுத்த ஜெ.. செந்தில் பேச்சு!
கரூர்: விஜயகாந்த்தைப் போய் புத்திசாலி என்று நினைத்து முதல்வர் ஜெயலலிதா ஒரு கனியைக் கொடுத்தார். ஆனால் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தெரியவில்லை அவருக்கு என்று நடிகர் செந்தில் பேசியுள்ளார்.
கரூரில் அதிமுக வேட்பாளர் தம்பித்துரைக்கு ஆதரவு திரட்ட நடிகர் செந்தில் வந்து பேசினார். பிரசாரத்திற்கு முன்பாக செய்தியாளர்களையும் சந்தித்தார் செந்தில். அப்போது அவர் கூறுகையில்,
கோவை, நீலகிரி, பொள்ளாச்சி ஆகிய 3 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து உள்ளேன். இந்த 3 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு அதிக செல்வாக்கு உள்ளது.

முதல்வர் வழங்கி உள்ள திட்டங்கள் பற்றி மக்களுக்கு புரியும்படி எடுத்து சொல்லி வருகிறேன். இலங்கையில் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டு வருகிறார்கள். அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
மத்திய அரசின் பிடி நம் தமிழ்நாட்டில் இருக்க வேண்டும். மத்திய அரசு தமிழ் நாட்டிற்கு எதை கேட்டாலும் 'நஹி' என்று சொல்கிறார்கள். 'நஹி' என்ற வார்த்தையை மாற்ற வேண்டும்.
நாங்கள் சூரியனை எடுக்க சொன்னோமா, மாம்பழம், முரசு ஆகியவற்றை எடுக்க சொன்னோமா. இலைக்கு மட்டும் அவர்களுக்கு என்ன வந்தது. தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு கண்டிப்பாக ஓட்டு கிடையாது.
விஜயகாந்த் புத்திசாலி என்று, முதல்வர் அவருக்கு ஒரு கனி கொடுத்தார். அதை ஒழுங்காக பயன்படுத்திகொள்ள அவருக்கு தெரியவில்லை. ஆண்டவன்- மக்கள் புண்ணியத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்றார் செந்தில்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications