தருமபுரி மாவட்ட திமுக பொறுப்பாளராகிறாரா செந்தில்குமார் எம்.பி..?
தருமபுரி: திமுகவில் மாவட்டம் தோறும் அதிரடி மாற்றங்களை நிகழ்த்தி வரும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞர்களை அதிகளவில் மாவட்ட பொறுப்பாளர்களாக கொண்டு வரும் திட்டத்தில் இருக்கிறார்.
ஏற்கனவே திருச்சி, நாமக்கல் போன்ற மாவட்டங்களுக்கு இளைஞர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்திற்கும் புதிய முகம் ஒருவரை மாவட்ட பொறுப்பாளராக திமுக தலைமை நியமிக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. இப்போது மாவட்டச் செயலாளராக உள்ள தடங்கம் சுப்பிரமணி எம்.எல்.ஏ. சொல்லிக்கொள்ளும் வகையில் பெரிதாக செயல்படவில்லை என்றும், அதிமுக முகாமுடன் சுமூக உறவு பேணுவதாகவும் கட்சித் தலைமைக்கு புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.

மேலும், முல்லை வேந்தன் திமுகவில் இருந்து கடந்த 2014-ல் நீக்கப்பட்டதால் வேறு வழியின்றி தடங்கம் சுப்பிரமணியன் தற்காலிக மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் எப்படியோ ஒரு வழியாக மாவட்டச் செயலாளராக மாறி தனது பதவியை அவர் தக்க வைத்துக்கொண்டார். இதனிடையே தருமபுரி மக்களவை உறுப்பினராக உள்ள செந்தில்குமார் எம்.பி. மக்கள் பணிகளில் தீயாக வேலை செய்து வருகிறார். இவரை பற்றி தலைமைக்கும் எந்த புகாரும் இதுவரை சென்றதில்லை.
செந்தில்குமார் எம்.பி. மீது உள்ள ஒரே குறை என்னவென்றால், எதற்கெடுத்தாலும் முன்கோபம் பட்டுவிடுகிறார், இதனால் அரசு அதிகாரிகள் திமுக கோரிக்கைகளை கிடப்பில் போட்டுவிடுகிறார்கள் என்பது மட்டும் தான். மற்றபடி மனிதர் நேர்மையானவர். அதிகாரிகளிடம் மட்டும் இவர் கொஞ்சம் கோபத்தை குறைத்துக்கொண்டு, நெளிவு சுளிவு தெரிந்து பக்குவமாக எடுத்துக்கூறி காரியத்தை சாதிக்க தெரிந்தால் செந்தில்குமாரை மிஞ்ச மாவட்டத்தில் ஆளே இல்லை என்கின்றனர் தருமபுரி மாவட்ட உ.பி.க்கள்.
இதனிடையே பாமகவின் கோட்டையாக கருதப்படும் தருமபுரியில் அந்தக் கட்சியை எதிர்த்து சமரசமின்றி அரசியல் செய்ய தகுதியான நபர் செந்தில்குமார் எம்.பி. என்பதால் அவருக்கு விரைவில் மாவட்ட பொறுப்பாளர் பதவி கிடைக்கக்கூடும் எனத் தெரிகிறது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications