டாஸ்மாக்கில் சின்டெக்ஸ் டேங்க்.. மதுப்பிரியர்களுக்கு தனி நம்பர் பிளேட்.. வேட்பாளரின் நூதன கோரிக்கை
ஸ்ரீபெரும்புதூர்: டாஸ்மாக்கில் சின்டெக்ஸ் டேங்க் வைக்க வேண்டும். மதுப்பிரியர்களுக்கு தனி நம்பர் பிளேட் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு நூதன கோரிக்கையுடன் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க மாநில செயலாளர் லோக்சபா தேர்தலில் களமிறங்கி உள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் அன்றைய தினம் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது.

இந்த தேர்தலில் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க நிர்வாகிகள் போட்டியிடுகின்றனர். இந்த சங்கத்தின் மாநில மாநில செயலாளர் எம்எஸ் ஆறுமுகம் இன்று ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதியில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த சமயத்தில் எம்எஸ் ஆறுமுகம் கழுத்தில் தாலி கயிறு அணிந்து வித்தியாசமான முறையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்புமனுத்தாக்கலுக்கு பின் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர்களின் கோரிக்கைகளை பட்டியலிட்டார். இதுதொடர்பாக எம் எஸ் ஆறுமுகம் கூறியதாவது:
நான் முதல் முதலாக ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ளேன். சங்க தலைவர் செல்லப்பாண்டியனுடன் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளேன். எங்களை பொறுத்தமட்டில் நாட்டில் இளம் விதைவகளை கணக்கிட்டு அசு வேலை வழங்க வேண்டும். இந்தியா முழுவதும் கடல்நீரில் தான் மதுபானம் தயாரிக்க வேண்டும்.
மேலும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ரூ.10, 20க்கு தண்ணீர் விற்பனை செய்கின்றனர். இதனை மாற்ற வேண்டும். மதுப்பிரியர்கள் பாதிக்கப்படாத வகையில் செலவை குறைக்கும் நோக்கத்தில் டாஸ்மாக்கில் சின்டெக்ஸ் டேங்க்கில் குடிநீர் வைக்க வேண்டும். மேலும் அரசு வேலையில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
மதுப்பிரியர்களுக்கு தனியாக நம்பர் பிளேட் வேண்டும். நாங்கள் டாஸ்மாக்கில் செக்காக வழங்காமல் பணமாக வழங்கிறோம். அரசுக்கு ரூ.36 ஆயிரம் கோடி ஆண்டு முழுவதும் கொடுக்கிறோம். அனைத்து சரக்கு பாட்டிலுக்கும் தமிழில் பெயர் வைக்க வேண்டும். வரும் தேர்தல் என்பது பக்தி கூட்டணி பாஜக, பகுத்தறிவு கூட்டணி திராவிட கட்சிகள் மற்றும் எங்களின் பார் கூட்டணிக்கு இடையே தான் போட்டியாக இருக்கும். இதனால் எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்'' என்றார்.
இந்த வேளையில் தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் செல்லப்பாண்டியன் அளித்த பேட்டியில், ‛‛மதுபானம் குடிப்போரின் வாகனங்களுக்கு தனி கலர் வழங்க வேண்டும். இதனால் மதுப்பிரியர்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள முடியும். நாங்கள் புதச்சேரி உள்பட 40 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளோம். இந்த தேர்தல் வித்தியாசமான தேர்தலாக அமையும்'' என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications