செப்-2 ல் பேருந்து, லாரி, கார், வேன், ஆட்டோக்கள் "பந்த்".. புதிய மோட்டார் வாகன சட்டதிற்கு எதிர்ப்பு
சென்னை : புதிய மோட்டார் வாகன சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து, வருகிற 2-ந்தேதி நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.
இதனால் தமிழகத்திலும் பேருந்து, லாரி, ஆட்டோ, கார், வேன் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இந்த மசோதாவை நிறைவேற்றக்கூடாது என்று அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் மோட்டார் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் இதனை கைவிட வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இதை கண்டித்து வருகிற 2-ந்தேதி நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.
தமிழகத்திலும் இந்த வேலை நிறுத்தத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் கலந்து கொள்கின்றன. சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., டி.எம்.எஸ்., எச்.எம்.எஸ்., எல்.பி.எப்., ஐ.என்.டி.யூ.சி., எம்.எல்.எப்., தே.மு.தி.க., திராவிடர், பாட்டாளி, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கலந்து கொள்கின்றன. இதனால் 2-ந்தேதி தமிழகத்தில் லாரி, கார், வேன், ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சாலை போக்குவரத்து பாதுகாப்பு சம்மேளன மாநில தலைவர் ஆறுமுக நயினார் கூறியதாவது...
மத்திய அரசு கொண்டு வரும் சாலை போக்குவரத்து மசோதா உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்கும் வேலை நிறுத்தத்தில் ஆளுங்கட்சி தவிர பிற சங்கங்கள் அனைத்தும் கலந்து கொள்கின்றன.
லாரி உரிமையாளர்கள், மோட்டார் வாகன பழுது பார்ப்போர் சங்கம், கேஸ் லாரி உரிமையாளர் சங்கம், மணல் லாரி உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளன.
இதனால் 2-ந்தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பேருந்து, லாரி, டூரிஸ்ட் கார், வேன், ஆட்டோக்கள் ஓடாது. இதற்கான ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்த வேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்களும் பங்கேற்பதால், தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து பாதிக்கும் என கூறப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications