அதிமுக கூட்டணியைவிட்டு வெளியேறிய சேதுராமன் மு.க. ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு!
சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத் தலைவர் சேதுராமன் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினை திடீரென இன்று சந்தித்து பேசினார். மேலும் திமுகவுடனான கூட்டணி குறித்து 2 நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் சேதுராமன் கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் மூவேந்தர் முன்னணி கழகம் இடம்பெற்றிருந்தது. தேர்தல் கூட்டணி தொடர்பாக அதன் தலைவர் சேதுராமனை அழைத்து ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்தியும் இருந்தார்.

ஆனால் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்த ஜெயலலிதா, மூவேந்தர் முன்னணிக்கு ஒரு தொகுதியைக் கூட ஒதுக்கவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்த சேதுராமன், கூட்டணியை விட்டு விலகுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் இன்று சென்னையில் திடீரென திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார் சேதுராமன். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேதுராமன் திமுக உடனான கூட்டணி குறித்து 2 நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என்றார்.
திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு 58 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக 176 இடங்களில் போட்டியிட உள்ளது. இதனிடையே மூவேந்தர் முன்னணி கழகத்துக்கும் சில தொகுதிகளை திமுக ஒதுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications