தமிழகத்தில் 7 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம்: நுங்கம்பாக்கம், அசோக்நகருக்கு புதிய உதவி கமிஷனர்கள்
சென்னை: தமிழகத்தில் ஏழு டி.எஸ்.பி.க்கள் இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதன்படி நுங்கம்பாக்கம், அசோக்நகருக்கு புதிய உதவி கமிஷனர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது :-
உளவு பிரிவு (ஹைகோர்ட்) உதவி கமிஷனராக இருந்த பாண்டியன், நுங்கம்பாக்கம் உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். வடசென்னை மதுவிலக்கு உதவி கமிஷனர் ஆறுமுகம், அசோக் நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன், சென்னை உளவு பிரிவுக்கும், திருவள்ளூர் குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி. சிவலிங்கம், கும்மிடிப்பூண்டிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
விருதுநகர் டி.எஸ்.பி. சுப்பிரமணியன் நீலகிரிக்கும், திருப்பூர் குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி. கவுதமன் தர்மபுரிக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.
சென்னை தலைமையக உதவி கமிஷனர் கோபால் பரங்கிமலை போக்குவரத்து பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தர்மபுரி மதுவிலக்கு டி.எஸ்.பி. திருநீலகண்டன், கூடலூருக்கு இடம் மாற்றம் செய்ய முதலில் உத்தரவிடப்பட்டது. பின்னர் அந்த உத்தரவு மாற்றப்பட்டு தர்மபுரியிலேயே நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications