நெல்லை திமுக மாவட்ட செயலாளர் ‘கனா’ மீது திமுக பிரமுகர் வீட்டு பெண் பாலியல் புகார்!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளர் கருப்பசாமி பாண்டியன் மீது, அக்கட்சியை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை டவுனை சேர்ந்தவர் தமிழரசி. இவர் நேற்று இரவு நெல்லை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு புகார் கொடுக்க சென்றார். அங்கு அவரது புகார் ஏற்கப்படாத நிலையில், இன்று காலை நெல்லை சரக டி.ஐ.ஜி. சுமித் சரண் அலுவலகத்துக்கு சென்றார்.

அங்கு அவரை சந்தித்து அளித்துள்ள புகார் கடிதம்

பாரம்பரிய திமுக குடும்பம்

பாரம்பரிய திமுக குடும்பம்

அங்கு அவரை சந்தித்து அளித்துள்ள புகார் மனுவில், கூறியிருப்பதாவது:

எனது தாத்தா குறள்ஏருழவர், மொழிப்போர் தியாகி. 1950களில் நெல்லையில் தி.மு.க.,வை தோற்றுவித்தவர். திருக்குறளில் ஆய்வு செய்து 17 புத்தகங்கள எழுதியுள்ளார். எனது தந்தை நாலடியாரும் கட்சியில் மாநகர இளைஞரணி செயலாளராக இருந்துள்ளார். எனது தம்பி குறளமுதனும் கட்சி பணியில் ஈடுபட்டுவருகிறார். நான் எம்.ஏ.,எம்.பில்.,படித்துள்ளேன். திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

அரசியல் ஆர்வம்

அரசியல் ஆர்வம்

நான் கட்சியில் ஈடுபட ஆர்வமாக இருந்ததால், எனது தந்தை, நெல்லை மாவட்ட தி.மு.க.,செயலாளர் கருப்பசாமிபாண்டியனை சந்தித்து கட்சியில் பொறுப்பு பெற்று பணியாற்றலாம் என கூறினார். இதற்காக ஆகஸ்ட் 23ம் தேதி, நெல்லை கோர்ட்டிற்கு எதிரே உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச்சென்றார்.

மொபைல் எண் வாங்கிய உதவியாளர்

மொபைல் எண் வாங்கிய உதவியாளர்

அப்போது என்னிடம் அரசியலுக்கு வருவது நல்லது என்ற ரீதியில் பேசிய கருப்பசாமிபாண்டியன், எனது மொபைல் எண்ணை அவரது உதவியாளர் அல்லல் கார்த்திக்கிடம் கொடுக்குமாறு கூறினார். நானும் போன் நம்பரை கொடுத்தேன். 28ம் தேதி மாவட்ட செயலரின் உதவியாளர் கார்த்திக் என்னிடம் பேசினார்.

குற்றாலத்தில் வக்கிரம்

குற்றாலத்தில் வக்கிரம்

குற்றாலத்தில் உள்ள கருப்பசாமிபாண்டியனின் பங்களாவிற்கு வருமாறு கூறினார். நானும் எனது தந்தையும் 28ம் தேதி மாலை ஐந்து மணிக்கு குற்றாலம் பங்களாவிற்கு சென்றோம். அங்கு எனது தந்தையை வெளியே இருக்க சொல்லிவிட்டு, என்னை மட்டும் உள் அறைக்குள் அழைத்தார்கள். உள்ளே இருந்த கருப்பசாமிபாண்டியன், என்னிடம் முதலில் குடும்ப சூழல் குறித்து கேட்டறிந்தார். பின்னர் ஆபாசமாக பேச ஆரம்பித்தார்.

கேர்ள் பிரண்டாக இருக்க வேண்டும்

கேர்ள் பிரண்டாக இருக்க வேண்டும்

அரசியலில் நல்ல சூழலுக்கு வரவேண்டும் என்றால், அவருக்கு கேர்ள் பிரண்டாக இருக்கும்படி கூறினார். சுக துக்கங்களில் பங்குகொள்ளும்படியும், அதற்காக எல்லா வசதிகளையும் செய்துதருவதாகவும் கூறினார். எல்லோர் முன்னிலையிலும் என்னோடு காரில் வரமுடியாது. உனக்காக கார் வாங்கித் தருகிறேன். அதில் வரவேண்டும். என்னுடன் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளவேண்டும்.

முத்தம் கேட்டார்

முத்தம் கேட்டார்

பெற்றோரிடம் பக்குவமாக எடுத்துக்கூறி, இதற்கு சம்மதித்தால், நீ இன்னும் தைரியமாக இருக்கலாம் என்றார். இதனால் நான் அதிர்ச்சியடைந்தேன். என் உடலெல்லாம் நடுங்கியது. என் அருகில் வந்தவர், இதற்கு சம்மதித்தால், என் கையில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு போ என்றார். உங்கள் பேத்தி, வயது இருப்பேன். இதெல்லாம் முறையா என்றேன். அப்போது அவர் என்னை, நீயாக தேடிவந்துவிடு. இல்லையென்றால் எப்படி வழிக்கு கொண்டுவரத்தெரியும் என்றார்.உடனே வெளியே வந்துவிட்டேன்.

அம்மா மூலம் அப்பாவிடம்..

அம்மா மூலம் அப்பாவிடம்..

உள்ளே நடந்தது குறித்து எனது தந்தையிடம் கூறினால், அங்கு பிரச்னை வரலாம் என்பதால் அவருடன் வீட்டுக்கு வந்த பிறகு என் அம்மா மூலம் தந்தையிடம் விபரத்தை சொன்னேன். எனவே மனம்பொறுக்காமல், இந்த பிரச்னையை தி.மு.க.,பொருளாளர் ஸ்டாலினிடம் புகாராக கூறினோம். அவரோ அவருடன் இருந்த இளங்கோவன் போன்றவர்களோ இதனை கண்டுகொள்ளவில்லை. என்னையும் என் தந்தையும், திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க அனுமதி தரவில்லை.

கொலை மிரட்டல்

கொலை மிரட்டல்

இதற்கிடையே கடந்த ஐந்தாம் தேதி முதல் கருப்பசாமிபாண்டியன், ஆதரவாளர்களிடம் இருந்து எனக்கு கொலைமிரட்டல் வந்தவாறு உள்ளது. எனவே என் பெண்மையை சிதைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு பாலியல் தொந்தரவு செய்ததோடு, கொலைமிரட்டல் விடுத்த கருப்பசாமிபாண்டியன், உடந்தையாக இருந்த உதவியாளர் அல்லல் கார்த்திக் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் கூறியுள்ளார்.

தாஜா செய்த கனா ஆட்கள்

தாஜா செய்த கனா ஆட்கள்

நெல்லை டி.ஐ.ஜி.,அலுவலகத்தில் தமிழரசி புகார் கொடுக்க வந்திருப்பது தெரிந்ததும்,கருப்பசாமிபாண்டியன் தரப்பில் தி.மு.க.,வினர் டி.ஐ.ஜி.,பங்களா வளாகத்தினுள் கூடினர். தமிழரசியையும் அவரது தந்தையையும் சந்தித்து புகாரை வாபஸ் பெறும்படி கூறினர். அதற்கு தமிழரசி மறுத்துவிட்டார். இருப்பினும் தமக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து பேட்டியளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+