For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழிசையை பார்த்து ஷாநவாஸ் கேட்டாரு பாருங்க ஒரு கேள்வி!

மெர்சல் படம் மக்கள் நலனுக்கான படம் என்றால் எதற்காக டிக்கெட் கட்டணம் என்று தாறுமாறாக கேள்வி எழுப்பிய தமிழிசைக்கு சரியான கேள்வியை கேட்டுள்ளார் ஷாநவாஸ்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: மெர்சல் படம் மக்களுக்கான படம் என்றால் எதற்காக டிக்கெட் கட்டணம் என்று கேள்வி எழுப்பிய தமிழிசையை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலாளர் ஷாநவாஸ் ஒரு கேள்வியை கேட்டு திணறடித்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் அட்லி இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான படம் மெர்சல் ஆகும். இதில் மருத்துவர்களுக்கு எதிராகவும், ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிராகவும் வசனங்கள், காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த காட்சிகளுக்கு தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதை அடுத்து அப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆதரவு அலை அதிகம்

ஆதரவு அலை அதிகம்

மெர்சல் படத்துக்கு எதிர்ப்புகளை காட்டிலும் ஆதரவுதான் அதிகம். பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதற்கு நெட்டிசன்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கிழி கிழியென கிழித்து வருகின்றனர். மேலும் எதிர்க்கட்சியினரும் மெர்சல் பட வசனங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழிசை அடடே கேள்வி

தமிழிசை அடடே கேள்வி

மெர்சல் படம் குறித்து கடலூரில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலளிக்கையில், மக்கள் நலன் சார்ந்த படம் தானே ரூ.5 கட்டணத்திலோ அல்லது இலவசமாகவோ படம் பார்க்க படக்குழுவினர் அனுமதிப்பார்களா. கலைச் சேவைதானே. மக்களை சந்தோஷப்படுத்த இலவசமாக பார்க்க அனுமதியுங்களேன்.

விமர்சனம் சரியானது அல்ல

விமர்சனம் சரியானது அல்ல

மருத்துவர்கள் தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்து கொண்டு சேவையாற்றி வருகின்றனர். எதை வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம் என்பது சரியானது அல்ல என்றார் தமிழிசை.

வி.சி. பிரமுகர் ஷாநவாஸ்

தமிழிசையின் இந்த தாறுமாறான கேள்விக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை செயலாளர் ஷாநவாஸ் தக்க பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறுகையில், மக்கள் நலனுக்கான படம் என்றால் எதற்காக டிக்கெட் கட்டணம்? என்கிறார் தமிழிசை. "மக்களுக்கான சாலை எனில், எதற்கு சுங்கக் கட்டணம்?" என்று சரியான கேள்வி எழுப்பியுள்ளார்.

மத முத்திரை வேண்டாம்

படம் குறித்து எச். ராஜா தனது டுவிட்டரில் சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய். இந்தியாவில் பள்ளி கல்வி, மருத்துவம் ஏழைகளுக்கு இலவசம். ஜோசஃப் விஜய்யின் மோடி வெறுப்பே மெர்சல் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஷாநவாஸ் மற்றொரு டுவீட்டில் கூறுகையில், GSTயை ஆதரிக்கவும் எதிர்க்கவும் இந்திய குடிமக்களுக்கு உரிமை உண்டு. மெர்சலில் விமர்சித்த விஜய்க்கு மத முத்திரை குத்துகிறார் எச்.ராஜா என்று பதிவிட்டுள்ளார்.

ஜிஎஸ்டியால் இந்துக்களே மெர்சலாகிவிட்டனர்

ஷாநவாஸின் மற்றொரு டுவீட்டில், GSTக்கு எதிரான வசனத்தால் இந்துக்கள் மெர்சலாகி விடுவார்கள் என்கிறார் இல.கணேசன். GSTயால் இந்துக்கள் உட்பட நாடே மெர்சலாகி இருப்பது தெரியாதுபோல! என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Deputy Secretary General of Viduthalai Chiruthaigal party Sha Navas asks Tamilisai that Roads developed in National Highways are only for people means why the government collects tollgate charges?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X