தமிழகத்தின் டைட்டானிக் ஹீரோ.. அரசியலுக்கு வந்துடுங்க- ரஜினிக்கு பாஜகவில் இருந்து அடுத்த கொக்கி ரெடி
ரஜினிகாந்த் அரசியலுக்கு எப்படியாவது வந்து விடுங்கள் என்று பாஜக தலைவர் சத்ருகன் சின்ஹா அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை; கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டதே அரசியல் பரபரப்பாகிவிட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்த அவர், தனது கடைசி நாள் உரையால் அரசியல் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஸ்டாலின், திருமாவளவன், அன்புமணி, சீமான் போன்றவர்கள் அரசியலில் இருந்தாலும் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினிகாந்த் பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து பாஜகவில் இருந்து அழைப்பு மேல் அழைப்பு ரஜினிக்கு..

மாய்ந்து மாய்ந்து அழைப்பு
ரஜினி எப்படியாவது பாஜகவிற்கு வந்துவிட வேண்டும் என்று பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா முதல் தமிழ்நாட்டுத் தலைவர் தமிழிசை வரை மாய்ந்து மாய்ந்து அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். "கதவு திறந்தே கிடக்கிறது", "வந்தால் பாஜக பலம் பெறும்" என்று திரும்ப திரும்ப பாஜக தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

நண்பர் மூலம் தூது
இதற்கு எதற்கும் மூச்சு விடாத ரஜினிகாந்த் தனது அடுத்தப் படத்தில் நடிக்க மும்முரமாகிவிட்டார். யார் என்ன சொன்னாலும் பதில் சொல்லாமல் இருப்பதால் கடுப்பான பாஜக, தற்போது அவரது நீண்ட நாள் சினிமா நண்பரான சத்ருகன் சின்ஹாவை விட்டு அழைப்பு விடுத்திருக்கிறது.
|
தமிழ் நாட்டின் டைட்டானிக் நாயகனே
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று பாஜக எம்பியும், ரஜினியின் சினிமாத் துறை நண்பருமான சத்ருகன் சின்ஹா தனது டுவிட்டர் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளார். அதில் தமிழ்நாட்டின் டைட்டானிக் கதாநாயகனே, இந்தியாவின் மகனே, அன்புள்ள ரஜினிகாந்த், நீங்கள் அரசியலில் குதிப்பதற்கு இதுவே சரியான மற்றும் உச்சக்கட்ட தருணம்.

அரசியல் பிரவேசத்தைக் காண ஆவல்
உங்களது ஆக்கப்பூர்வமான அரசியல் பிரவேசத்தை காண நாடே ஆவலுடன் காத்திருக்கிறது. உங்களுடைய மக்கள் மற்றும் நாட்டு மக்களின் எதிர்கால வாழ்க்கையை வடிவமைக்க அரசியலுக்கு வாருங்கள். ஒரு நல்ல நண்பனாக, நலம் விரும்பியாக உங்களது ஆதரவாளராக, வழிகாட்டியாக எப்பொழுதும் நான் உங்களுடன் இருப்பேன். இப்பொழுதும் இருக்கிறேன் என்று வரிசையான டுவிட்டி அழைத்திருக்கிறார் சத்ருகன் சின்ஹா.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications