பேசாம "சூரியனை"யேப் பார்த்திருக்கலாம்.. குழப்பிய "பம்பரம்".. இப்போது புலம்பும் "கப்பல்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் முதலில் சூரியனோடு கை கோர்க்கத் தான் திட்டமிட்டிருந்தார் கப்பல் தலைவர். ஆனால், இடையில் புகுந்த பம்பரக்காரர் குழப்பி விட்டார் என்பது ஊரறிந்த ரகசியம் தான்.
ஆனால், இதில் கப்பல் தலைவரை சம்மதிக்க வைத்ததில் அவரது மனைவிக்கும் அதிக பங்கு உள்ளது. மனைவி சொல்லே மந்திரம் என்ற கொள்கையின் அடிப்படையில் தான் தலைவர், கூட்டணி குறித்தே முடிவு எடுத்தார் என கட்சி வட்டாரத் தகவல்கள் வெளியாகின.

பம்பரக்காரரும் இதனை பல மேடைகளில் பகிரங்கமாகவே சொன்னார். ஆனால், கப்பல் தலைவரின் கட்சித் தொண்டர்களுக்கு ஆரம்பம் முதலே இந்தக் கூட்டணியில் விருப்பம் இல்லை. இதனால் அதிருப்தியில் சிலர் கட்சியில் இருந்தும் வெளியேறினர். ஆனால் விரும்பிய கூட்டணியில் சேர்ந்தும், அவர்களுக்கு அஸ்தமனமே மிஞ்சியது வேறு கதை.
இது ஒருபுறம் இருக்க, தேர்தல் முடிவுகள் மாற்றத்தை விரும்பிய கூட்டணிக்கு மாற்றத்தை தரவில்லை. அதிலும் கப்பல் தலைவரின் தோல்வியால் அவரது கட்சித் தொண்டர்கள் ரொம்பவே அப்சட்டாம்.
இந்த மோசமான தோல்விக்கு கூட்டணி தான் காரணம் என்று குற்றம் சாட்டும் தொண்டர்கள், அந்தக் கூட்டணிக்கு தலைவரை அழைத்துச் சென்ற துணைவியார் மீது கடும் கோபத்தில் உள்ளனராம்.
இதனால் தேர்தல் பிரச்சாரங்களில் கணவரைவிட அதிக இடங்களுக்கு சென்ற மனைவி, கொஞ்ச நாட்கள் கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்க வேண்டாம் என முடிவு செய்துள்ளாராம். பேசாமல் முன்னதாக திட்டமிட்டபடி சூரியனோடே கை கோர்த்திருந்தால், கவுரவமான தோல்வியாவது கிடைத்திருக்கும் என கவலைப்பட்டு வருகிறாராம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications