பிறந்தநாளில் காதலனால் சுட்டுக்கொல்லப்பட்ட காதலி.. விசாரணையில் அம்பலமான திடுக் தகவல்!
விழுப்புரம் அருகே காதலியை சுட்டுக்கொன்றுவிட்டு காவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

விழுப்புரம்: அன்னியூரில் காதலியை சுட்டுக்கொன்றுவிட்டு காவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
விழுப்புரம் அருகே உள்ள அன்னியூரில், தனது காதலி சரஸ்வதி என்பவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு கார்த்திவேல் என்ற காவலர் தானும் தற்கொலை செய்து கொண்டார். காதலியின் பிறந்த நாளுக்கு இரவு 12 மணிக்கு கேக் வெட்டிய கையோடு பெற்றோர் முன்னிலையிலேயே இந்த கொடூர சம்பவம் அரங்கேறியது.
இரவு 12 மணிக்கு அடுத்தடுத்து கேட்ட 2 துப்பாக்கி தோட்டாக்கள் வெடிக்கும் சத்தத்தால் கதிகலங்கி போயினர் அப்பகுதி மக்கள். காதலியை கொன்று தற்கொலை செய்து கொண்ட கார்த்திவேல் சென்னை ஆவடி கமாண்டோ பயிற்சி பெற்று 15-வது பட்டாலியனில் இருந்து வந்தார்.

மருத்துவ மாணவி
தமிழக பாதுகாப்பு பிரிவில் ஓ.டி.யாக இருந்து வந்தார்.
கார்த்திவேலால் சுட்டுக்கொல்லப்பட்ட சரஸ்வதி, சென்னை ஈஎஸ்ஐ மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார்.
[வாடகைக்கு வீடு கேட்க பொய்யாக ஒரு கணவர் தேவைப்பட்டார்.. அதை அவர் உண்மையாக்கினார்.. நிலானி ஓபன் டாக்!]

ஃபேஸ்புக் மூலம் காதல்
சத்தியமங்கலத்தை சேர்ந்த கார்த்திவேலுக்கு மருத்துவ மாணவி சரஸ்வதி ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார். முதலில் நட்பாக தொடங்கிய இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் பச்சைக்கொடி காட்டினர்.

காதலி சுட்டுக்கொலை
ஆனால் காதலர்களுக்குள் கடந்த சில மாதங்களாக மனக்கசப்பு இருந்துவந்துள்ளது. சரஸ்வதிக்கு நேற்று பிறந்த நாள்வாழ்த்துக்களை தெரிவிக்கச்சென்ற போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் கார்த்தி தனது இருசக்கர வாகனத்தில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவரது பெற்றோர் கண்முன்னே சுட்டுக்கொன்றார்.

விலகிய காதலி
மேலும் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, மருத்துவ மாணவியான சரஸ்வதி, காதலன் கார்த்தியுடன் பேசுவதை சமீப காலமாக அவாய்ட் செய்து வந்துள்ளார்.

பிறந்தநாளுக்கு வாழ்த்து
இதுகுறித்து கல்லூரியில் விசாரித்துள்ளார் கார்த்தி. அப்போது தன்னுடன் படிக்கும் ஒரு மருத்துவ மாணவருடன் சரஸ்வதி நெருங்கி பழகி வந்துள்ளது தெரியவந்தது. இந்நிலையில் காதலியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல சென்ற கார்த்தி அவரிடம் இதுகுறித்து விசாரித்துள்ளார்.

தாங்கிக்கொள்ள முடியாமல்
அப்போது சரஸ்வதி உரிய பதில்சொல்லாமலும் முகம் கொடுத்து பேசாமலும் இருந்துள்ளார். இதனை தாங்கிக்கொள்ள முடியாத கார்த்திவேல் தனது காதலியை சுட்டுக்கொன்றதோடு தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications