வட தமிழகத்திற்கு வேகமாக வருது.. என்ஜாய் பண்ணுங்க.. தமிழ்நாடு வெதர்மேன் போட்ட சூப்பர் ட்வீட்
சென்னை: சுற்றிலும் நிற்குது மேககூட்டம் ஆனால் எட்டித்தான் பார்க்க மாட்டிங்கு மழை. இந்நிலையில் வட தமிழகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் மேகக்கூட்டங்களுடன் கடல் காற்று வீசும் என்றும் வெதர்மேன் தமிழ்நாடு வெதர்மேன் மழை குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார்
வட தமிழகத்தை பொறுத்தவரை பெரிதாக மழையே இல்லை.. வெப்பசலனத்தால் வெந்து போய் இருக்கும் மக்களுக்கு ஆறுதல் தர வேண்டிய மழை திசை மாறி சுற்றித்திரிவதால், புழுக்கத்தில் தவிக்கிறார்கள்.

அதே நேரம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் குரு 9ம் நம்பர் இடத்தில் இருக்கிறது போல, அங்கு தான் கொட்டிக்கொண்டே இருக்கிறது. ஊட்டி, கொடைக்கானல் மற்றும் தேனி மாவட்டத்தில் சில பகுதிகளில் இந்த மாதம் நல்ல மழை பெய்தது.
ஆனால் வட தமிழகத்திற்கு மட்டும் சூரியன் தான் உச்சத்தில் இருக்கிறது. நேரடியாக சூரியன் ரெஸ்ட் எடுத்துட்டு போகும் இடமாக வடதமிழகத்தை வச்சு செய்து வருகிறது. பகலில் வெயிலின் கொடுமை என்றால், இரவில் புழுக்கம் தாங்க முடியாத அளவிற்கு இருக்கிறது. நேற்று மாலை சில்லென்ற காற்று ஆங்காங்கே வீசியது, சிறியதாக மழை சில இடங்களில் எட்டியும் பார்த்தது. ஆனால் பூமியின் வெப்பத்திற்கு அந்த மழை எங்கு போனது என்றே தெரியவில்லை.
சரி விஷயத்திற்கு வருவோம். வட தமிழ்நாட்டில் வானிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தன்னுடைய ட்விட் பதிவில் கூறியுள்ளார். " மிகவும் வலுவான மற்றும் சுழற்றி அடிக்கும் காற்று, நிறைய காற்றுடன் மேகங்களைக் கொண்டு வருகிறது. வட தமிழ்நாட்டின் இன்றைய வெப்பத்திற்கு சற்று நிவாரணம் தரும் என்று நினைக்கிறேன். மேகத்தையும் காற்றையும் அனுபவியுங்கள் என்று கூறியுள்ளார். அதாவது வட தமிழகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் மேகக்கூட்டங்களுடன் கடல் காற்று வீசும் என்றும் வெதர்மேன் கூறியுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications