கத்தியால் குத்திய கஞ்சா வியாபாரி.. நெஞ்சில் விழுந்த 3 கோடு.. விடாமல் கட்டிப் புரண்ட எஸ்.ஐ!
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கஞ்சா வியாபாரி ஒருவரை மடக்கிப் பிடிக்க முயன்ற சப் இன்ஸ்பெக்டரை, கஞ்சா வியாபாரி கத்தியால் குத்தினார். இருந்தும் விடாமல் அந்த சப் இன்ஸ்பெகட்ர் அந்த கஞ்சா வியாபாரியுடன் சண்டை போட்டார். பின்னர் பொதுமக்களும் சேர்ந்து அந்த கஞ்சா வியாபாரியை மடக்கிப் பிடித்தனர்.
அருப்புக்கோட்டையில் நடந்த இந்த மோதல் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் எஸ்.ஐ. யாக இருப்பவர் வீராசாமி. இவர் ஆத்திப்பட்டி பகுதியில் தனது பைக்கில் வந்து கொண்டிருந்தபோது இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மீது சந்தேகம் வந்து நிறுத்தி விசாரித்தார்.

அப்போது அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். தொடர்ந்து அவரிடம் சோதனை போட்டபோது கஞ்சா பொட்டலங்கள் இருப்பதும், அவர் கஞ்சா விற்பவர் என்றும் தெரிய வந்தது. இந்த நிலையில் அந்த கஞ்சா வியாபாரி கத்தியை எடுத்து வீராசாமியை குத்தப் பாய்ந்தார். இதில் வீராசாமியின்மார்பில் கத்தி பட்டு 3 கோடு விழுந்தது. இருப்பினும் விடாமல் வீராசாமி அவருடன் மோதினார். இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்.
இதைப் பார்த்து அப்பகுதியில் இருந்த மக்கள் திரண்டு வந்து கஞ்சா வியாபாரியை மடக்கிப் பிடித்தனர். பின்னர் வீராசாமி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கஞ்சா வியாபாரியை போலீஸார் பிடித்துச் சென்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications