சிலம்பு எக்ஸ்பிரஸ் இன்று முதல் செங்கோட்டை வரை நீட்டிப்பு: பொது மக்கள் மகிழ்ச்சி
மானாமதுரை வரை இயக்கப்பட்டு வந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டை: சென்னையில் இருந்து மானாமதுரை வரை இயக்கி வந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை - மானாமதுரை சிலம்பு விரைவு ரயில், மானாமதுரையில் 12 மணி நேரத்துக்கும் மேலாக எந்தப் பயனும் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டு சென்னைக்கு இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சென்னையில் இருந்து மானாமதுரை வரை இயக்கி வந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் இரயில் கடந்த ஜன.15ம் தேதி ஞாயிற்றுகிழமை முதல் அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.

இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பல்வேறு திட்டங்களைத் துவக்கிவைக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில், மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்பி நவநீத கிருஷ்ணன், எம்பி மைத்ரேயன் மற்றும் ரயில்வே அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அப்போது சென்னையில் இருந்து மானாமதுரை வரை இயக்கப்பட்டு வந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம், தென்காசி வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து இன்று இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 5ம் தேதி மானாமதுரைக்கு 5.30க்கு வந்து சேரும். அங்கிருந்து 5.40க்கு கிளம்பி நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டைக்கு 6.27க்கு வந்து சேர்கிறது.
அதன்பின், விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, திருவில்லிப்புத்தூர், இராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புக்கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டைக்கு 10.20க்கு செல்கிறது. 5ம் தேதி மாலை 4 மணிக்கு செங்கோட்டையில் இருந்து கிளம்பி தென்காசி வழியாக அருப்புக்கோட்டைக்கு 6.49க்கு வந்து சேர்கிறது.
அங்கிருந்து புறப்பட்டு மானாமதுரை வழியாக சென்னைக்கு 6ம் தேதி காலை 5.45க்கு சென்றடையும். ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும். இந்த ரயில் வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சென்னையில் இருந்து இயக்கப்படுகிறது. இந்த இரயில் சேவையால் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் திருத்தங்கல், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி நகரங்களில் தொழில் வளர்ச்சி பெருகும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications