‘கெட்டவன் கேட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’.. கமல் பாணியில் டுவிட்டிடும் சிம்பு

கெட்டவன் கேட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்று நல்ல தமிழில் நடிகர் கமல் ஹாசன் போன்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கெட்டவன் கேட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்று தனது அடுத்தப்படம் குறித்த தகவலை பதிவிட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன் நடிகர் சிம்பு, தனது அடுத்தப்படம் பற்றிய அறிவிப்புகள் முறையாக வெளியாகும் வரை காத்திருக்கும் படி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஊடகங்கள் தேவையில்லாமல் ஊகச் செய்திகளை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ளவும் அவர் கேட்டுக் கொண்டார். முன்னதாக, சிம்பு கைவிட்ட 'கெட்டவன்' படத்தை அவர் மீண்டும் தொடங்க உள்ளதாகவும், பில்லா படத்தின் மூன்றாவது பாகத்தை அவரே இயக்கி நடிக்கப் போவதாகவும் செய்திகள் பரவியதால், சிம்பு இந்தப் பதிவை வெளியிட்டார்.

இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், தனது அடுத்தப்படம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். "கெட்டவன் கேட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்" யுவன் ஷங்கர் ராஜா இசையில் சிலம்பரசன்.டி.ஆர். படம். 7 முறை விழுந்து விட்டேன், 8-வதாக எழுவேன்; படத்தின் பெயர் மற்றும் இதர விவரங்கள் விரைவில்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதனை வெளியிட்ட கொஞ்ச நேரத்தில் மீண்டும் தனது படத்தைப் பற்றிய இன்னொரு டுவிட்டையும் சிம்பு வெளியிட்டார். "இந்தப் படத்தில் பாடல்கள் கிடையாது, இடைவேளை கிடையாது, படம் தொடங்கும் முன்பே டிரிங்ஸ், பாப்கார்னை வாங்கிவிடுங்கள்,செப்டம்பர் 2017-ல் படம் ரிலீஸ்" என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+