விஷாலை எதிர்த்து தனுஷ், சிம்புவை களம் இறக்குகிறாரா சரத்குமார்?
சென்னை: நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணியில் சிம்பு, தனுஷ் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக தொடர்ந்து அனல் பறக்க பிரச்சினை நடந்து வருகிறது. விஷால், கார்த்தி உள்ளிட்டவர்கள் ஒருதரப்பாகவும், சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட அணி மற்றொரு தரப்பாகவும் உள்ளது.
இந்த இரண்டு அணிகளும் நடிகர் சங்கத் தேர்தல் விவகாரத்தில் மோதி வருகின்றனர். இந்தப் பிரச்சினை நீதிமன்ற வாசலையும் எட்டியுள்ளது.

இளம் நடிகர்கள்...
இளம் நடிகர்கள் தங்கள் பக்கம்தான் என்று விஷால் குரூப் கூறிக் கொள்கிறது. இந்த நிலையில் இதை உடைத்து நொறுக்கும் வகையில் லீடிங்கில் இருக்கும் முன்னணி இளம் நடிகர்களான தனுஷ், சிம்பு ஆகியோரைக் களம் இறக்க சரத்குமார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

தனுஷ், சிம்பு...
நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணியில் சிம்பு, தனுஷ் போட்டியிட இருப்பதாக திருச்சி மாவட்ட நாடக நடிகர் சங்க பொதுச்செயலாளர் முகமது மஸ்தான் கூறியுள்ளார்.

வாக்குரிமை...
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், "திருச்சி மாவட்ட நாடக நடிகர் சங்கத்தில் 248 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 148 பேருக்கு தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வாக்குரிமை உள்ளது.

சிம்பு போட்டி...
திருச்சி நாடக நடிகர் சங்கம் சரத்குமார், ராதாரவி அணியை ஆதரிக்கிறது. சரத்குமார் அணி சார்பில் சிம்பு போட்டியிடப் போகிறார். அது பொருளாளர் பதவியாக இருக்க வாய்ப்புள்ளது.

தனுஷும்...
இதேபோல், ஏற்கனவே எங்கள் அணியில் உள்ள தனுஷ், எஸ்.எஸ்.ஆர். மகன் கண்ணன் போன்றோரும் இத்தேர்தலில் போட்டியிட உள்ளனர்.

விஷால் கூட்டம்...
மேலும், திருச்சியில் விஷால் ஏற்பாடு செய்துள்ள நாடக நடிகர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பு இல்லை என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

மாரி...
தனுஷ் நடித்த மாரி படத்தை சரத்குமாரின் மனைவி ராதிகாதான் தயாரித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications