ரஜினி, கமலை வம்புக்கு இழுக்கும் சிம்பு! #DemonetizationAnthem

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'தட்றோம், தூக்றோம்' என்ற பணமதிப்பிழப்பு தொடர்பான பாடலில் நடிகர்கள், ரஜினியும், கமலும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

கபிலன் வைரமுத்து எழுதி, பாலமுரளி பாலு என்பவர் இசையமைத்து சிம்பு பாடிய, 'தட்றோம், தூக்றோம்' என்ற பணமதிப்பிழப்பு தொடர்பான பாடல் சில தினங்கள் முன்பு வெளியானது.

Simbu song on demonistation is going viral

அந்த பாடலில் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சனம் செய்யும் பல வரிகள் உள்ளன. கோட் போட்டவங்க சங்க பிடிங்க அதைவிட்டு சாமானியர்கள் பணத்தை செல்லாது என அறிவிக்காதீர்கள் என்பது போன்ற வரிகள் அதில் வருகின்றன.

இந்த நிலையில், அந்த வீடியோ காட்சியில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையை நடிகர் ரஜினி வரவேற்ற டிவிட்டர் ஸ்க்ரீன் ஷாட் போடப்பட்டுள்ளது. கமல் வரவேற்ற டிவிட்டும் அதில் காட்டப்படுகிறது.

ஆனால் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை தவறுதலாக வரவேற்றுவிட்டாத கூறிய கமல், சில நாட்களுக்கு முன்பு, அதற்கு தனது மன்னிப்பை கேட்டுக்கொள்வதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Simbu song on demonistation is going viral in social media.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற