நடிகர், நடிகைகளின் சர்ச்சை வீடியோ.. கணவரை விவகாரத்து செய்ய தயாராகிறாராம் சுசித்ரா!
தமிழ் திரையுலகில் பல்வேறு சர்ச்சையில் சிக்கியுள்ள பாடகி சுசித்ரா, தனது டுவிட்டர் பக்கத்தில் கணவர் கார்த்திக் குமாரை விவாகரத்து செய்து குறித்து செய்தி வெளியிட்டுள்ளார்.
சென்னை: தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பற்றி சர்ச்சைக்குரிய படங்களை வெளியிட்டு சிக்கலில் சிக்கியுள்ள பாடகி சுசித்ரா தனது கணவரை விவாகரத்து செய்ய தயாராகிவிட்டார்.
தமிழ் திரைப்பட பாடகி சுசித்ரா சில நாட்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் மீது சில குற்றச்சாட்டுகளை அவருடைய டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டார். அதில், ஒரு பார்ட்டியில் தனுஷும் அவரது நண்பர்களும் தன்னிடம் முரட்டுத்தனமாகக் நடந்து கொண்டதால் கையில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
பின்னர், சுசித்ராவின் டுவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டதாகவும் சர்ச்சைக்குரிய பதிவுகள் அவரால் போடப்பட்டவை இல்லை என்றும் கூறப்பட்டது.

பகீர் குற்றச்சாட்டு
இந்த சர்ச்சைகள் ஓய்ந்த நிலையில் தனுஷ், த்ரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, ஹன்சிகா, சின்னத்திரை பிரபலம் திவ்யதர்ஷினி போன்றவர்களின் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை சுசித்ரா தனது டுவிட்டர் கணக்கில் இருந்து வெளியிட்டார்.

புதிய சர்ச்சை
மேலும், தனுஷ், அனிருத், அமலா பால், சஞ்சிதா, பாடகி சின்மயி, ஆண்ட்ரியா ஆகியோரின் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை வெளியிட நாள், தேதி குறிப்பிட்டு டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். மறுபடியும் தன்னுடைய டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சுசித்ரா கூறியுள்ளார்.

சுசித்ராவிற்கு மனநோய்…
இதனிடையே, கணவர் கார்த்திக் குமார் சுசித்ரா மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். "சுசித்ரா மன அழுத்தில் உள்ளார். அவரை அனைவரும் தங்கள் குடும்பத்தில் ஒருவராக கருத வேண்டும். அவர் குற்றம் சாட்டிய பிரபலங்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டதற்கு நன்றி" என தெரிவித்திருந்தார்.

சுசித்ராவிற்கு மன்னிப்பு
சுசித்ரா மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று அவரது கணவர் கார்த்திக் கூறிய பின்னர், குற்றம்சாட்டப்பட்ட பிரபலங்களில் பாடகி சின்மயி, நடிகை சஞ்சிதா, செல்வராகவன் ஆகியோர் சுசித்ராவை மன்னித்துள்ளனர். இதுகுறித்து இயக்குனர் செல்வராகன், சுசித்ராவிற்கு மன நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கார்த்திக் கூறியிருப்பதால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

கணவருக்கு விவாகரத்து
திரையுலக பிரபலங்களின் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, சுசித்ராவிற்கு மனநோய் என்று சொன்ன கணவர் கார்த்திக் குமாரை விவாகரத்து செய்வது குறித்து சுசித்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications