தற்கொலை செய்து கொள்வேன்..!- ரஜினி, தாணுவுக்கு புது மிரட்டல் விடும் சிங்காரவேலன்
'உங்களை எதிர்த்து என்னால ஒண்ணும் பண்ண முடியல. எனவே நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். அப்படி செய்து கொண்டால் உங்களையும் ரஜினியையும் உள்ளே உட்கார வைத்துவிடுவார்கள்.. பாக்குறீங்களா?'
-தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணுவுக்கு ஆடியோ மூலம் இப்படி புதிய மிரட்டல் விடுத்துள்ளார் விநியோகஸ்தர் சிங்காரவேலன்.

லிங்கா படத்தின் திருச்சி - தஞ்சை விநியோக உரிமை பெற்ற விநியோகஸ்தர்களில் ஒருவரான சிங்காரவேலன், அந்தப் படம் வெளியான நான்காவது நாளிலிருந்து செய்து வரும் ஆர்ப்பாட்டங்கள், முரணான பிரச்சாரங்கள், மிரட்டல்கள், நாடகங்கள் திரையுலகம் அறிந்ததே.
கிட்டத்தட்ட தினசரி பிரஸ் மீட் வைக்க ஆரம்பித்து, நாளும் ஒரு புகார், நஷ்டக் கணக்கு சொல்வதும், நஷ்ட ஈடு கேட்பதும் இன்றுவரை தொடர்கிறது.
லிங்கா படத்துக்கு நஷ்ட ஈடு பெற்ற பிறகும், மேலும் மேலும் பணம் கேட்டுக் கொண்டிருந்தவர், இப்போது ரஜினியின் கால்ஷீட் வேண்டும் எனக் கேட்க ஆரம்பித்துள்ளார்.
ரஜினிக்கு வயதாகிவிட்டது, அவர் ரசிகர்களுக்கு வயதாகிவிட்டது என்றெல்லாம் பேட்டிகள் கொடுத்தவர் இந்த சிங்காரவேலன் என்பது நினைவிருக்கலாம்.
லிங்கா பிரச்சினை தீர்ந்துவிட்டது என அறிவித்து கலைப்புலி தாணுவுக்கு நன்றி கூறி நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து, போஸ்டர் ஒட்டிய இதே சிங்கார வேலன் இப்போது, மீண்டும் லிங்கா பிரச்சினை இழுக்க ஆரம்பித்துள்ளார்.
இவரது நடவடிக்கைகளுக்கு இப்போது திரையுலகில் முற்றிலும் ஆதரவில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், அதன்பிறகு தாணுவையும், ரஜினியையும் 'உள்ளே' வைப்பார்கள் என்றும் ஆடியோ வடிவில் தாணுவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார் சிங்காரவேலன்.
அந்த வீடியோவில் அழுதபடி அவர் கூறியிருப்பதாவது:
தாணு அண்ணே, உங்களை நான் உயிருக்குயிரா நம்பினேன். நீங்க விநியோகஸ்தர்களுக்கு பணம் பெற்றுத் தருவீர்கள் என நம்பி நீங்கள் கொடுத்த ரூ 35 லட்சத்தை வாங்கிக் கொண்டேன். ஆனால் பிறகு மொத்த பணமும் தியேட்டர்காரர்களுக்கு போகும்படி செய்துவிட்டீர்கள்.
எங்களுக்கு நீங்கள் பணம் பெற்றுத் தருவது போல நடித்து மோசடி செய்துவிட்டீர்கள். உதவி செய்யற மாதிரி நடிச்சி ஏமாத்திட்டீங்க. நாங்க போராடறத கூட நீங்க உங்க அதிகாரத்தை வச்சி தடுக்கறீங்க.
மார்ச் மாசமே பணத்தைக் கொடுத்திருந்தா கூட நான் அந்த கங்காரு படத்தை நல்லபடியா ரிலீஸ் பண்ணியிருப்பேன். ஆனா அதை செய்யாம, கங்காரு தயாரிப்பாளரை வச்சி கேஸ் போடவச்சிட்டீங்க.
எங்க போராட்டத்துல யாரையும் கலந்துக்க விட மாட்டீங்கறீங்க.
உங்களையும் ரஜினி சாரையும் தண்டிக்க என்னால முடியும். என்கிட்ட அதிகாரமில்லாவிட்டாலும், நான் தற்கொலை பண்ணி உங்களுக்கு தண்டனை வாங்கித் தருவேன். நான் செத்துட்ட பிறகு உங்களையும் ரஜினியையும் உள்ளே வைத்துவிடுவார்கள்," என்று கூறியுள்ளார்.
இதனை ஆடியோவாக பதிவு செய்து வாட்ஸப்பில் தாணுவுக்கு அனுப்பி வைத்துள்ளார் சிங்காரவேலன்.
தன்னுடன் செல்போனில் பேசும் அத்தனை பேரின் பேச்சுக்களையும் அவர்களுக்கே தெரியாமல் பதிவு செய்து வைத்துக் கொண்டு, நேரம் கிடைக்கும்போது, அதனை வாட்ஸப்பில் வெளியிடுவது அல்லது குறிப்பிட்ட நபருக்கு நெருக்கமானவர்களுக்கு அனுப்பி வைப்பதை சிங்கார வேலன் வழக்கமாக வைத்துள்ளார். இந்த விஷயத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவிருப்பதாக நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த தற்கொலை மிரட்டல் ஆடியோவை தாணுவுக்கே சிங்காரவேலன் அனுப்பியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications