"சரக்கை உட்டுக்கோ சைடிஸை தொட்டுக்கோ.... திருச்சியை அதிரவைத்த கோவனின் பாடல்
திருச்சி: டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி பாடியதால் தேசப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்ட ம.க.இ.க. பாடகர் கோவனின் புதிய பாடலாக களமிறக்கப்பட்டுள்ளது "சரக்கை உட்டுக்கோ சைடிஸை தொட்டுக்கோ...". திருச்சியில் அண்மையில் நடைபெற்ற மதுவிலக்கை வலியுறுத்தும் மாநாட்டில் பாடப்பட்ட இப் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.
மூடு டாஸ்மாக்கை மூடு, ஊருக்கு ஊரு சாராயம் தள்ளாடுது தமிழகம்; ஊத்திக் கொடுத்த உத்தமிக்கு போயஸில உல்லாசம் போன்ற பல பாடல்களைப் பாடி டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடுவதற்கான பிரசாரம் செய்து வந்தவர் மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சேர்ந்த பாடகர் கோவன்.

அவர் பாடிய பாடல்களில் முதல்வர் ஜெயலலிதாவை மிகக் கடுமையாக விமர்சிப்பதாக கூறி திடீரென அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மீது தேசதுரோக வழக்கும் பாய்ந்தது. இதில் நீதிமன்றம் தலையிட்டு கோவன் ஜாமீனில் விடுதலையானார்.
இந்நிலையில் ம.க.இ.க.வின் மற்றொரு அமைப்பான "மக்கள் அதிகாரம்" சார்பாக திருச்சி தென்னூரில் கடந்த 14-ந் தேதி டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வலியுறுத்தி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பாடகர் கோவன் பாடிய பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அந்த பாடல்:
சரக்கை உட்டுக்கோ சைடிஸை தொட்டுக்கோ..
குடி சிந்திக்காதே குடி...
ஆத்து மணல் கொள்ளையைக் கண்டுக்காமல் இருந்துக்கோ,
ஆவின் பாலில் சோப்பு நுரை
ஆயிரம் கோடி தியேட்டர் டீசர்ன்னு நினைச்சிக்கோ.
குடி சிந்திக்காதே குடி...
அரிசி விலை ஏறுதுன்னா அம்மா மெஸ்ல துன்னுக்கோ
வீட்டுக்குப் போனா பேஜாருன்னா டாஸ்மாக்ல தூங்கிக்கோ
குடி சிந்திக்காதே குடி..
இந்த பாடலை கோவன் பாடும்போது தென்னூர் உழவர் சந்தை மைதானமே அதிர்ந்தது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications