கண் புற்றுநோயுடன் போராடும் 3 வயது மகளை காப்பாற்ற திணறும் சிங்கிள் தாய்க்கு உதவுங்க ப்ளீஸ்
Recommended Video

சென்னை: ஸ்ரேயாவுக்கு 3 வயது தான் ஆகிறது. ஆனால் அவள் மகளையும் தாண்டி எனக்கு தோழி போன்றவள் என்கிறார் சிங்கிள் தாயான சுசாந்தி நாயக்.
சுசாந்திக்கு தனது மகள் தான் உலகம். மூன்று மாதங்களுக்கு முன்பு ஸ்ரேயாவின் இடது கண்ணில் வெள்ளைப் புள்ளி இருப்பதை கவனித்தார் சுசாந்தி. அப்பொழுது அது என்னவென்று சுசாந்திக்கு தெரியாது.
15 நாட்கள் கழித்து வேலை முடித்து வீட்டிற்கு வந்த சுசாந்தி தனது மகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். ஸ்ரேயாவின் முதுகில் பெரிய அளவில் வெள்ளைப் புள்ளி இருப்பதை பார்த்து சுசாந்தி அதிர்ச்சி அடைந்து உடனே மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஸ்ரேயாவுக்கு கண் புற்றுநோய் இருப்பதாக தெரிவித்தனர். வாழ்க்கை முழுவதும் போராடிய சுசாந்திக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது.
ஒடிஷா மாநிலம் ஜெய்பூர் மாவட்டத்தில் உள்ள மங்கல்பூர் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் சுசாந்தி. அங்கு கல்வி, வேலை அதுவும் குறிப்பாக பெண்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. இதையடுத்து சுசாந்தி கொல்கத்தாவுக்கு சென்று தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலைக்கு சேர்ந்தார். அவரின் மாத சம்பளம் ரூ. 15,000.
ஸ்ரேயாவை உடனே சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுரை வழங்கினார்கள். இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்ரேயாவுக்கு கீமோதெரபி செய்யப்படுகிறது.
முதல் கீமோவுக்கு மட்டுமே சுசாந்தி ரூ. 1 லட்சம் செலவாகும் என்று தெரிவித்தனர். சிங்கிள் தாயான தன்னால் ஒரு முறை கீமோ செய்ய ரூ. 1 லட்சம் அளிக்க முடியாது என்று சுசாந்தி மருத்துவர்களிடம் கெஞ்சியுள்ளார். இதையடுத்து அவர்கள் அந்த செலவை ரூ. 50 ஆயிரமாக குறைத்தார்கள். ஆனால் இன்னும் 3 முறை கீமோ செய்ய, மருத்துவமனையில் தங்க, மருந்து செலவு என்று ரூ. 4 லட்சம் வரை செலவாகும்.
தான் சேர்த்து வைத்த பணத்தை எல்லாம் செலவு செய்துவிட்ட சுசாந்தி உறவினர்களிடமும் கடன் வாங்கியுள்ளார். ஆனால் ஸ்ரேயாவின் சிகிச்சைக்கு ஆகும் முழு பணத்தையும் செலுத்த முடியாமல் அல்லாடுகிறார்.
தனது உலகமான ஸ்ரேயாவை காப்பாற்றிக் கொடுக்குமாறு நல் உள்ளங்களிடம் மன்றாடுகிறார். உங்களால் முடிந்த உதவியை செய்தால் அது சுசாந்திக்கு பேருதவியாக இருக்கும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!
















Click it and Unblock the Notifications