கோவை அருகே கணவனைப் பிரிந்து வாழ்ந்த பெண் கழுத்தறுத்து கொலை - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரியைச் சேர்ந்தவர் ரேணு. இவர் தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கோவை அரிசிபாளையத்தில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று ரேணு கழுத்தறுக்கப்பட்ட நிலையில் வீட்டில் பிணமாகக் கிடந்துள்ளார். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

Lady Murder in Coimbatore-Oneindia Tamil

விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தனித்து வாழும் பெண்களை குறிவைத்து தாக்கி கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. இம்மாதிரியான சம்பவங்களைத் தடுக்க தனித்து வாழும் பெண்களுக்கு என்று பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து போலீசார் யோசிப்பது அவசியம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Kovai,Arisipalayam a single woman killed bu unknown person and police investigating this case.
Please Wait while comments are loading...