Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஜினியுடன் செல்பி எடுத்த சிங்களத்து "சூப்பர் ஸ்டார்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை துணை அமைச்சர் ரஞ்சன் ராமநாயகே சென்னை வந்து நடிகர் ரஜினிகாந்த்துடன் செல்பி எடுத்துக் கொண்டு அதை தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ளார். ரஜினி் மட்டுமல்லாமல் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் ஆகியோருடனும் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டு அதை வெளியிட்டுள்ளார்.

ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதில் எந்த அரசியலும் இல்லை என்றும் தான் அவரது ரசிகர் என்றும் விளக்கியுள்ளார் ராமநாயகே.

இருப்பினும் ரஜினி உள்ளிட்ட இந்தியக் கலைஞர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இலங்கை அரசியலை கலக்கி வருகிறதாம்.

சிங்களத்து சூப்பர்ஸ்டார்

சிங்களத்து சூப்பர்ஸ்டார்

ரஞ்சன் ராமநாயகே, இலங்கையின் சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர். அந்த அளவுக்கு இலங்கையில் இவரது கொடிதான் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் பறக்கிறதாம்.

பேரக் கேட்டாலே சும்மா குழம்புதுல்ல!

பேரக் கேட்டாலே சும்மா குழம்புதுல்ல!

இவரது முழுப் பெயரைக் கேட்டால் குழம்பிப் போயிருவீங்க பாஸ்.. அது இதுதான்... சத்தா வித்தா ராஜபக்சே பலங்கா பத்திரா அம்பகுமரகே ரஞ்சன் லியோ சில்வஸ்டர் அல்போன்சு.

அப்பறம் ஏன் ராமநாயகே??

அப்பறம் ஏன் ராமநாயகே??

பிறகு ஏன் ராமநாயகே என்று சம்பந்தம் இல்லாத பெயரால் இவர் அழைக்கப்படுகிறார் என்ற குழப்பம் உங்களுக்கு வரலாம். இவர் நடித்த முதல் படம் ராமநாயகே. அது ஹிட்டாகியதால் இவரும் சூப்பர் ஹிட்டாகி விட்டாராம். அந்த நன்றிக் கடனுக்காகவே தனது பெயருடன் ராமநாயகேவை சேர்த்து விட்டார்.

பல துறை வித்தகர்

பல துறை வித்தகர்

நடிப்பு மட்டுமல்லாமல், இயக்குநர், பாடகர், கதாசிரியர், அரசியல்வாதி, எம்.பி. என பல துறைகளில் வித்தகராக உள்ளார் இவர். ரணில் விக்கிரமசிங்கே அமைச்சரவையில் சமூக நலத்துறை துணை அமைச்சராக இருக்கிறார்.

ரஜினியுடன் செல்பி

ரஜினியுடன் செல்பி

ரஞ்சன் ராமநாயகே இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தார். அப்போது சென்னை வந்த அவர் ரஜினி, கமல், ஷங்கரைச் சந்தித்துப் பேசினார். செல்பியும் எடுத்துக் கொண்டார். இதை தனது பேஸ் புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

விருது வாங்குவதில் இவர் ஒரு கமல்

விருது வாங்குவதில் இவர் ஒரு கமல்

இந்த ரஞ்சன் ராமநாயகே, விருது வாங்குவதில் இன்னொரு கமல் போல. வருடா வருடம் இவர் இலங்கையில் வழங்கப்படும் விருதுகளை அள்ளிச் சென்று விடுவாராம். கடந்த 10 வருடமாக பாப்புலர் நடிகர் விருதை இவர் மட்டும்தான் தொடர்ந்து வாங்கிக் குவித்து வருகிறாராம். அதேபோல ஏகப்பட்ட முறை சிறந்த நடிகர் விருதையும் தட்டிச் சென்றுள்ளாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+