குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் வந்தால் ஒய்ன்ன்ன்... னு சவுண்ட் வரும்! சென்னை ஐஐடி அசத்தல்
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் திடீர் வெள்ளப்பெருக்கால் சிறுவன் உயிரிழந்த நிலையில் குற்றால அருவிகளில் சென்சார் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளுக்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். மழை காலங்களில் இந்த குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்தும் கொட்டும்.

இதனால் சுற்றுலா பயணிகளின் கோடை சாய்ஸில் குற்றாலம் எப்போதும் இருக்கும். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக கோடை வெயில் கொளுத்தி எடுத்து வந்ததால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக வந்து ஏமாற்றமடைந்தனர்.
இந்த நிலையில் 10 நாட்களுக்கு முன்பு நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழையால் குற்றால அருவிகளில் நீரானது , வெள்ளியை உருக்கியது போல் வந்து விழுகிறது. இந்த நிலையில் ஏப்ரல் 17ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகள் பழைய குற்றால அருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பழைய குற்றால அருவியில் திடீரென அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் நெல்லையை சேர்ந்த 17 வயது சிறுவன் உயிரிழந்தார். இதையடுத்து குற்றால அருவிகளில் மறுஅறிவிப்பு வரும் வரை குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பழைய குற்றால அருவி, பிரதான அருவி, ஐந்தருவியில் ஐந்தருவி மட்டும் தற்போது வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. நீர் வரத்து கண்காணிப்பு, உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் பிரதான அருவி, பழைய அருவி ஆகிய இரு அருவிகளையும் வனத்துறையினர் வசம் ஒப்படைக்க மாவட்டம் நிர்வாகம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது பொதுப் பணித் துறை , மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த இரு அருவிகளும் அடுத்த இரு தினங்களுக்குள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த நிலையில் குற்றால அருவிகளில் திடீர் காட்டாற்று வெள்ளத்தை கண்காணிக்க சென்சார்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
சென்சார் அமைப்பதற்காக சென்னை ஐஐடி பேராசிரியர் தலைமையிலான சிறப்பு குழு அமைக்கப்பட்டு கடந்த 20 நாட்களுக்கு முன்பு அருவி பகுதியில் ஆய்வு செய்தனர். இந்த குழு தயாரித்த சென்சார் கருவிகளை அருவிகளின் மேற்பகுதிகளில் பொருத்த தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. வெள்ளம், கனமழை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் வகையில் இந்த சென்சார் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குற்றால அருவிகளில் சென்சார் கருவிகளை வைக்கும் பணிகள் தொடங்கிய நிலையில் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications