சிவகங்கை சிறுமி பலாத்கார வழக்கு: எஸ்.ஐ., கண்டக்டர் உள்ளிட்ட 5 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை சிறுமி பாலியல் வழக்கில் கைதான எஸ்.ஐ., அரசு பஸ் நடத்துநர் உட்பட 5 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மகளிர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பாலியல் பலாத்கார வழக்கில் உயரதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டவர்களும் ஜாமீனில் விடுதலையாகியுள்ளதால் வழக்கின் போக்கு திசைமாற வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Sivagangai girl rape case: SI gets condition bail

சிவகங்கையை சேர்ந்த 17 வயது சிறுமியை பலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தந்தை முத்துப்பாண்டி சகோதரர் கார்த்திக், உறவினர்கள் சுரேஷ்குமார், முத்துராக்கு, டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், கண்டக்டர் நமச்சிவாயம், கார்த்திக்கேயன், ராமநாதன், செந்தில், அரவிந்த் மற்றும் சிறுமியின் அத்தை செல்வி அவரது மகன் ஆகிய 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

பரபரப்பான இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். வழக்கு விசாரணை சிவகங்கை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சிறுமியின் சகோதரர் கார்த்திக், ஏற்கனவே ஜாமீன் பெற்று வெளியே வந்து விட்டார். இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், உறவினர் சுரேஷ்குமார், செந்தில், அரவிந்த் ஆகியோர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனு சிவகங்கை மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெயராஜ் முன்னிலையில் செவ்வாய்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி கைது செய்யப்பட்ட 4 பேரும் 90 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்துள்ளதால் அவர்களை ஜாமீனில் விடுதலை செய்வதாக கூறி உத்தரவிட்டார். நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ள நீதிபதி ஜெபராஜ், சிவகங்கையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திடுமாறு தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் பலாத்கார வழக்கில் உயரதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டவர்களும் ஜாமீனில் விடுதலையாகியுள்ளதால் வழக்கின் போக்கு திசைமாற வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+