சிவாஜி கணேசன் மணிமண்டபம் அக் 1-ம் தேதி திறப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணி மண்டபம் வரும் அக்டோபர் 1-ம் தேதி திறக்கப்படும் என அரசுத் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே தமிழக அரசு அமைத்துள்ளது. சுமார் 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பல கோடி ரூபாய் செலவில் இந்த மணி மண்டபம் உருவாக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரை சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட அவரது சிலை, இந்த மணி மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ளது.
வரும் அக்டோபர் 1-ந் தேதியன்று சிவாஜிகணேசனின் 90-வது பிறந்த நாள் வருகிறது. அந்த தினத்தில் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மணிமண்டபத்தை திறந்து வைப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications