மே... மே..னு முடியுதாம்... வாட்ஸப்பில் வைரலாகும் சிவாஜி படப்பாடல்!
அவன் தான் மனிதன் படப்பாடல் ஒன்று வாட்ஸப்பில் வைரலாக வலம் வருகிறது.
சென்னை: ரூம் போட்டு யோசிப்பார்களோ என நாம் ரூம் போட்டு யோசிக்கும் அளவிற்கு, காலத்திற்கு தக்கபடி வாட்ஸ் அப்பில் புதிய செய்திகளை வீடியோக்களை சிலர் பரப்புகின்றனர்.
மழை காலம் வந்துவிட்டாலே போதும், உடனே, 'செல்லும் வழி எங்கெங்கும் பள்ளம் வரலாம், உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம், நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல், நாளும் நடைபோடுங்கள் ஞானம் பெறலாம்’ என்ற ரஜினி படப்பாடல் வாட்ஸ் அப்பில் அதிகம் பகிரப்படும்.
அந்தவகையில் தற்போது மே மாதம் தொடங்கியுள்ளதைக் குறிக்கும் வகையில், பழைய பாடல் ஒன்றின் ஆடியோ ஒன்று வைரலாக வலம் வருகிறது.

அப்பாடல், சிவாஜி, மஞ்சுளா நடித்த 'அவன்தான் மனிதன்’ படத்தில் இடம்பெற்றது. எம்.எஸ்.வி. இசையில் கண்ணதாசனின் வரிகளை டி.எம்.எஸ்-ம், சுசிலாவும் பாடியுள்ளனர்.
அப்படி என்ன சிறப்பு அந்தப் பாடலிற்கு சிறப்பு என்கிறீர்களா...?
'அன்பு நடமாடும் கலை கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னி தமிழ் மன்றமே’ - என அப்பாடலின் அனைத்து வரிகளும் 'மே...’ என்றே முடிகின்றன.
எனவே, இப்பாடலை மே மாதச் சிறப்பு பாடலாக வாட்ஸப்வாசிகள் புகழ் பாடி வருகின்றனர்.
என்னமோ போடா மாதவா..!
அந்தப் பாடலின் வீடியோவைப் பார்ப்போமா.. இதோ:












Click it and Unblock the Notifications