சென்னை கடற்கரையில் சிவாஜி சிலையை அகற்ற தடையில்லை.. ஹைகோர்ட் அதிரடி
சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி கணேசன் சிலையை அகற்ற தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
சென்னை: சென்னை கடற்கரை சாலையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்ற தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நடிகர் சிவாஜி கணேசன் சிலை, மெரினா கடற்கரைக்கு செல்லும் ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் காமராஜர் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும் அதனை அகற்ற வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாகள நடிகர் திலகம் சிவாஜி சமுகநலப் பேரவைத் தலைவர் கே.சந்திரசேகரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவாஜி சிலையை கடற்கரை சாலையில் இருந்து அகற்றி மணி மண்டபத்தில் வைக்க தடையில்லை என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
மெரினா சாலையில் இருந்து அகற்றப்படும் சிலையை காமராஜர் சாலையில் உள்ள மணி மண்டபத்தில் வைக்க வேண்டும் என்று மனுதாரர் கோரியிருந்தார். அதற்கு எந்தவித தடையும் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
சிவாஜியின் நினைவு தினமான ஜூலை 21ம் தேதி அவரது சிலையை அகற்றக் கூடாது என்றும் மனுதாரர் கோரிக்கை வைத்தார். இதனைத் தொடர்ந்து, 4 வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications