காங்கிரஸுக்கு சிவகாமியும் கை கொடுக்கிறார்.. 40 தொகுதிகளிலும் பிரசாரம்!
சென்னை: கூட்டணியே இல்லாமல் குழம்பிப் போய் புலம்பிக் கொண்டிருந்த காங்கிரஸுக்கு ஒரு வழியாக கடைசி நேரத்தில் இரண்டு கைகள் கிடைத்து விட்டன.

நல்ல கையோ அல்லது அல்லக் கையோ ..ஏதாவது ஒரு கை இருந்தால்தான் எதிலுமே உற்சாகமாக, தெம்போடு ஈடுபட முடியும் எனபார்கள். ஆனால் நொள்ளக் கைக்குக் கூட வழியில்லாமல் போய்க் கிடந்த காங்கிரஸுக்கு தற்போது தொப்பி கார்த்திக் கை கொடுத்துள்ளார்.
அதேபோல தலித் தலைவரான சமூக சமத்துவப் படை தலைவர் சிவகாமி ஐஏஎஸ்ஸும் தற்போது உதவிக் கரம் நீட்டியுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்யப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவரும் கார்த்திக்கும் நேற்று சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து ஞானதேசிகனைச் சந்தித்து தங்களது ஆதரவை உறுதிப்படுத்தினர். அப்போது சிவகாமிக்கு ஞானதேசிகன் பொன்னாடை போர்த்தி வரவேற்பும், நன்றியும் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சிவகாமி பேசுகையில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், அடித்தட்டு மக்களுக்கு வீடு உத்திரவாதம், அடிப்படை சுகாதாரத்திற்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அதனால், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம் என்றார்.
40 தொகுதிகளிலும், தானும் கார்த்திக்கும் பிரசாரம் செய்யப் போவதாகவும் சிவகாமி தெரிவித்தார்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி











Click it and Unblock the Notifications