ஜிஎஸ்டியை எதிர்த்து… 5வது நாளாக தொடரும் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம்
ஜிஎஸ்டி வரியை எதிர்த்து சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் செய்து வரும் வேலை நிறுத்தம் 5வது நாளாக தொடருகிறது.
சிவகாசி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி வரியை எதிர்த்து சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் செய்து வரும் வேலை நிறுத்தம் 5வது நாளாக இன்றும் தொடருகிறது
பட்டாசு தொழிலுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதை கண்டித்தும், வரியை 12 சதவீதமாக குறைக்க வலியுறுத்தியும், ஜூன் மாதம் 30ம் தேதி முதல் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில், ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக சிவகாசியில் உள்ள சுமார் 830 பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 80 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தங்களது கோரிக்கைகள் குறித்து பட்டாசு ஆலை உரிமையாளர்கள், இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேசவுள்ளனர். அதன்பிறகே போராட்டம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications