சேலம்: லாரி மீது கார் மோதி விபத்து: 6 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள்.
சங்ககிரி அருகே பழுதாகி நின்ற லாரி மீது வேகமாக வந்த கார் பயங்கரமாக மோதியது. இதில் 4 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக பலியானார்கள். மோதி நின்ற கார் மீது பின்னால் வந்த ஆட்டோ ஒன்றும் மோதியது. இதில் ஆட்டோ ஓட்டுனர் பலியானார்.
இதேபால் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே வேகமாக வந்த காரின் டயர் திடீரென்று வெடித்தது. இதனால் நிலைகுலைந்த கார் விபத்துக்குள்ளானது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த 2 பேர் உள்பட 3 பேர் பலியானார்கள்.












Click it and Unblock the Notifications