இன்னும் 6 எம்.எல்.ஏ.க்கள் தப்பி ஓடினால் எடப்பாடி அரசு காலி.. பெரும் பீதியில் அதிமுக!
கோவை அருண்குமாரை தொடர்ந்து ஓபிஎஸ் அதிமுகவுக்கு இன்னும் 6 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துவிட்டால் ஆட்சி கவிழ்ந்துவிடுமே என்ற கவலையில் ஆழ்ந்துள்ளதாம் எடப்பாடி முகாம்.
சென்னை: சசிகலா கோஷ்டியை விட்டு தப்பி ஓடி ஓபிஎஸ் அதிமுகவில் இன்னும் 6 எம்.எல்.ஏக்கள் சேர்ந்தால் ஆட்சி கவிழ்ந்துவிடுமே என்ற கவலையில் ஆழ்ந்துள்ளாராம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
சசிகலா முதல்வராக வேண்டும் என்பதற்காக கூவத்தூர் உல்லாச விடுதியில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டனர். ஆனால் சசிகலாவின் நினைப்பில் மண்ணை அள்ளிப் போட்டது உச்சநீதிமன்ற தீர்ப்பு.

122 எம்.எல்.ஏக்கள்
சசிகலா சிறைக்குப் போக நேர்ந்ததால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக்கப்பட்டார். கூவத்தூரில் சிறை வைக்கப்பட்ட 122 எம்.எல்.ஏக்களை அப்படியே சட்டசபைக்குள் ஆஜர்படுத்தி எடப்பாடி பெரும்பான்மையை நிரூபித்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

கோவை அருண்குமார்
இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. அருண்குமார் புறக்கணித்தார். தற்போது திடீரென ஓபிஎஸ் அதிமுகவுடன் அருண்குமார் கைகோர்த்துவிட்டர். இதனால் ஓபிஎஸ் அதிமுகவில் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

பீதியில் எடப்பாடி கோஷ்டி
இது எடப்பாடி பழனிச்சாமி அணியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இன்னும் 6 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் முகாமில் இருந்து தப்பி ஓடிவிட்டால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பீதியில் உள்ளது எடப்பாடி அணி. அந்த 6 பேர் யாராக இருக்கும் என யூகிக்கவும் முடியாமல் திணறுகிறதாம் சசி கோஷ்டி.

தினகரன் உளறல்
இந்த உதறலை மறைக்கத்தான் திமுகவில் இருந்து 15 எம்.எல்.ஏக்கள் எங்க பக்கம் வரப்போகிறாங்க என உளறி கொட்டினாராம் தினகரன். இருக்கிற எம்.எல்.ஏக்களை தக்க வைக்க முடியாத தினகரனின் இந்த உளறல் பேச்சை அதிமுகவினரே சகிக்கலையாம்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications