7 மீனவர்களை சிறை பிடித்த இலங்கை கடற்படை
தூத்துக்குடி: தமிழக கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மட்டக்கடை புதுத்தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருக்கு சொந்தமான நாட்டு படகில் கடந்த 25ம் தேதி மீனவர்கள் 7 பேர் திரேஸ்புரத்தில் இருந்து வழக்கம்போல் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

28ம் தேதி மாலை அவர்கள் கடலில் நங்கூரம் பாய்ச்சி மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை இலங்கை கடற்படை சுற்றி வளைத்து பிடித்துளளது. இதில் ரோபிஸ்டன், நஜிம்கான், ரீகன், மில்டன், பிரஸ்சோவ், ரோமன்டோ, ஆகிய 7 பேரை இலங்கை கடற்படையும், கடலோர காவல் படையம் இணைந்து பிடித்து சென்றுள்ளது. அவர்களை புத்தளத்தில் உளள இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஓப்படைத்துள்ளனர்.
இதற்கிடையே இலங்கை கடற்படையினர் தமிழகத்தை சேர்ந்த 7 பேர் தங்களது கல்பிட்டினா துறைமுகத்தின் அருகே உள்ள புத்தலன் குண்டுவா என்ற கடல் பகுதியில் 10 கடல் மைல் தொலைவில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கைது செய்துள்ளதாகவும், அவர்களிடம் இருந்து 500 கிலோ மீன்களும், 3 ஜிபிஎஸ் கருவிகளையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் நேற்று மாலை தமிழக மீன்வளத்துறையினருக்குத் தகவல் தெரிவித்து்ள்ளது.












Click it and Unblock the Notifications