காஞ்சிபுரம் அருகே தூக்கத்தில் நடக்கும் சிறுமி கிணற்றில் விழுந்து பலி
காஞ்சிபுரம் அருகே தூக்கத்தில் நடக்கும் சிறுமி கிணற்றில் விழுந்து பலியானார்.
காஞ்சிபுரம்: தூக்கத்தில் நடக்கும் பழக்கமுள்ள சிறுமி கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது காஞ்சிபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
காஞ்சிபுரத்தில் உள்ள பிராமணர் தெருவைச் சேர்ந்தவர் ரம்யா(15). இவர் அண்மையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 456 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

ரம்யாவின் தந்தை பார்த்தசாரதி சிறுவயதிலேயே இறந்துவிட்டதால் தற்போது ரம்யா அவருடைய அக்கா சத்யாவின் வீட்டில் தங்கிப் படித்துவந்துள்ளார். ரம்யாவுக்கு மிகவும் அரிதான தூக்கத்தில் நடக்கிற நோய் இருந்துள்ளது.
இந்நிலையில், ரம்யா கடந்த ஜூன் 14 ஆம் தேதி திடீரென்று வீட்டிலிருந்து காணாமல் போனார். அவரை அவருடைய அக்கா தங்களுடைய உறவினர் வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஜூன் 15 வரை தேடியுள்ளனர். ஆனாலும், ரம்யாவை கண்டுபிடிக்க முடியாததால் அவருடைய அக்கா சத்யா காவல் நிலையத்தில் புகார் அளிக்க திட்டமிட்டிருந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் அருகே உள்ள விவசாய நிலத்தில் நேற்று ஒரு சிறுமியின் உடல் மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரித்ததில் அது சிறுமி ரம்யாவின் உடல் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து ரம்யாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக செய்யாறில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது சிறுமியின் உடல் அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிறுமியின் மரணம் குறித்த போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், தூக்கத்தில் நடக்கும் பழக்கமுள்ள சிறுமி ரம்யா ஜூன் 14 ஆம் தேதி இரவு தூக்கத்தில் நடந்து சென்றுள்ளார். அப்படி நடந்து செல்லும்போது விவசாயக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications