சென்னையில் வெடித்தது மோடி கூட்டத்தில் வெடித்த அதே ரக குண்டு... விசாரணையில் அதிர்ச்சித் தகவல்
சென்னை: மோடி கலந்து கொண்ட பாட்னா பொதுக்கூட்டத்தில் வெடித்ததும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடித்ததும் ஒரே ரக குண்டு தான் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வியாழனன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த கவுகாத்தி ரயிலில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தமிழகத்தின் தலைநகரில் நடந்த இந்த குண்டுவெடிப்பு தமிழகத்தின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கியது.

தொடர்ந்து அந்த குண்டுவெடிப்பு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே இத்தாக்குதல் சம்பவம் ஆந்திரா வந்திருந்த பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான மோடியைக் குறி வைத்து நடத்தப் பட்டதாகவும், ரயில் தாமதத்தால் சென்னையில் வெடித்ததாகவும் செய்திகள் வெளியாயின.
இந்நிலையில் இத்தகவலை மேலும் உறுதி செய்யும் வகையில், சமீபத்தில் பாட்னாவில் நடைபெற்ற மோடி பிரச்சாரக் கூட்டத்தில் வெடித்த குண்டுகளுக்கும், சென்னையில் வெடித்த குண்டுகளுக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. ஆனால், அவை எத்தகைய ஒற்றுமைகள் என்பது தெளிவாக தெரிவிக்கப் படவில்லை.
கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடித்த இரட்டை குண்டுக்கான இணைப்பு ‘குவார்ட்ஸ்' கடிகாரத்தில் அவசரக் கோலத்தில் பொருத்தப்பட்டிருந்ததால், அந்த குண்டு வெடிப்பு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என புலனாய்வு அதிகாரிகள் கருதுகின்றனர்.
இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக சமீபத்தில் கைது செய்யப்பட்ட இந்திய முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த யாசீன் பத்கல் மற்றும் அக்தர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் பெங்களூரு நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இந்திய முஜாகிதீன் அமைப்பினர் தங்குவதற்கு ஏற்பாடுகளை செய்து தந்தவர்கள் என்பதால் விசாரணையில் பல புதிய தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications