கோவையில் ஆமை வேகத்தில் நடைபெறும் ரயில்வே மேம்பால பணிகள்: மக்கள் அவதி
கோவை: கோவையில் ரயில்வே மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கோவையில் ராமநாதபுரம்-போத்தனுர் சாலையில் நஞ்சுண்டாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் கட்ட கடந்த 2006-2007ம் ஆண்டு அறிவிப்பு வெளியானது. மேம்பாலம் கட்ட கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ம் தேதி நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு 12.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி மேம்பால கட்டுமான பணி துவங்கப்பட்டது. முதல் கட்டமாக ரயில் தண்டவாளப் பகுதியில் ரயில்வே துறை சார்பில் மேம்பாலம் கட்டப்பட்டது.
நெடுஞ்சாலைத்துறை மூலம் ரயில் பாதையின் இருபக்கமும், மேம்பாலம் கட்டப்படுகிறது. இதற்காக தனியார், அரசு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
இதனையடுத்து பலரும் வீடுகளை காலி செய்தனர். இருப்பினும், மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் போத்தனூர் சாலையில் பாலம் நிறைவடையும் இடத்தில் கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்த போதும் கடைசி இரண்டு கான்கிரீட் தூண்களை இணைக்கும் பணியும், பாலத்துடன் ரோட்டை இணைக்க அணுகுசாலை அமைக்கும் பணியும் மிக மந்த கதியில் நடைபெறுவதாக திமுக மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
மேலும், ராமநாதபுரம் மார்க்கத்தில் பாலம் கட்டும் பணிகள் நிறைவடைந்தாலும் அணுகுசாலை, சர்வீஸ்ரோடு போன்றவை இன்று வரை அமைக்கவில்லை. மேம்பாலப் பணி துவங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும், பணி நிறைவு செய்யப்படாமல் உள்ளது.
நஞ்சுண்டாபுரம் பாலம் பணி நிறைவு பெறாததால் கோவை தெற்கு பகுதிக்கும், ராமநாதபுரம் வழியாகச் செல்லும் போக்குவரத்தும் தடைபட்டுள்ளது. இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, ரயில்வே மேம்பால பணியை அதிகாரிகளும், அரசும் விரைவுபடுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications