'ஸ்மால்' பஸ்சில் ஏறி 'லார்ஜ்'...குட் காம்பினேஷன்...!
சென்னை: பட்டிக்காட்டான் மிட்டாயைப் பார்ப்பது போல என்று கிராமத்துக்காரர்களை ஏகமாகவே கிண்டலடிப்பார்கள்.. உண்மையில் பட்டணத்துக்காரர்கள்தான் தற்போது மிட்டாயைப் பார்ப்பது போல தமிழக அரசு விட்டுள்ள ஸ்மால் பஸ்ஸை விழுந்து விழுந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த அளவுக்கு முதல்வர் ஜெயலலிதா தனது கரங்களால் அறிமுகப்படுத்தி வைத்துள்ள ஸ்மால் பஸ் சென்னை மக்களிடையே ஹிட் ஆகியுள்ளது.
எங்கு ஸ்மால் பஸ்ஸைப் பார்த்தாலும் மக்கள் அப்படியே ஒரு ஸ்டெப் பேக் போய்.. வியந்து வேடிக்கை பார்க்கிறார்கள் பஸ்ஸை.

அம்மா பஸ்...
ஸ்மால் பஸ் என்று இந்த பேருந்துக்கு அரசு பெயர் வைத்திருந்தாலும் மக்கள் என்னவோ, இதை அம்மா பஸ் என்றுதான் செல்லமாக அழைக்கிறார்கள். அப்படி ஒரு அன்னியோன்யமாக அழைக்க ஆரம்பித்துள்ளனர்.

அட அத விடுய்யா.. இதப் பாருய்யா...
பாம் பாம் என்று ஹார்ன் அடித்தபடி ஸ்மால் பஸ் வந்தால் உடனே சாலையில் போவோர் வருவோர் எல்லாம் நின்று அதை புன்னகையுடன் வேடிக்கை பார்க்கின்றனர்.

இதுதான் அம்மா பஸ்ஸா...
பெண்களோ, தங்களுக்குள் புன்னகைத்தபடி இதுதான் ஜெயலலிதாம்மா விட்ட பஸ்ஸா என்று முகம் முழுக்க சிரிப்புடன் கிசுகிசுத்துக் கொள்கின்றனர்.

டிசைன் நல்லாருக்கே...
பலருக்கும் பஸ்ஸோட டிசைன் ரொம்பவே பிடித்துள்ளதாம். பார்க்க பளிச்சென வித்தியாசமாக இருக்கிறது. ஏதோ டிராவல்ஸ் பஸ் கணக்காகவே இருக்கிறது என்று பலரும் பாராட்டுகின்றனர்.

அது அந்த இலையா...
அதை விட முக்கியமாக பஸ்ஸின் சைடிலும் பின்னாலும் டிசைன் செய்யப்பட்டுள்ள அந்த பச்சை இலைதான் மக்களை கவனத்தில் ஈர்த்துள்ளது.. அந்த இலை மாதிரியே இருக்கே என்று மக்கள் கூறவும் தவறவில்லை.. பர்ப்பஸ் நிறைவேறிடுச்சுப்பா...

நில்லுண்ணா.. இந்தாண்ணா கூல்டிரிங்க்ஸ்
சைக்கிள்களும், ஆட்டோ ரிக்ஷாக்களும், சில பல வேன்களும் மட்டுமே வந்து செல்வதை இத்தனை காலமாக பார்த்து வந்த சென்னை புறநகர்ப் பகுதி மக்கள், ஸ்மால் பஸ்ஸைப் பார்த்து பிரமித்துள்ளனர். பல பகுதிகளில் ஏரியா மக்கள் பஸ்ஸை நிறுத்தி, பஸ் ஊழியர்களுக்கு கூல் டிரிங்ஸ், ஸ்வீட் கொடுத்து அசத்தவும் தவறவில்லை.

இன்னாய்யா... இது... நம்ம பொயப்புல மண்ணைப் போட்டுக்கினு..
இது பல ஏரியாக்களில் ஆட்டோக்காரர்களின் புலம்பல். மக்கள் எல்லாம் ஜாலியாக ஸ்மால் பஸ்களை வேடிக்கை பார்க்க ஆட்டோக்காரர்கள் பலர் இந்த பஸ்ஸை பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

டாஸ்மாக் போக வசதியாயிருக்கு மாமே...
குரோம்பேட்டையிலிருந்து மேடவாக்கம் மற்றும் மாடம்பாக்கத்திற்கு 2 ஸ்மால் பஸ்களை விட்டுள்ளனர். அதில் மேடவாக்கம் போகும் பஸ், அஸ்தினாபுரம், திருமலை நகர் வழியாக போகிறது. திருமலைநகர் கடைசியில் ஏரிக்கு அருகே ஒரு டாஸ்மாக் கடை. லேட்டஸ்டாக திறந்த கடை இது. அந்தக் கடைக்கு வருவோரெல்லாம் இப்போது இந்த ஸ்மால் பஸ்ஸில்தான் ஆரவாரமாக வந்து போகின்றனர்.
'ஸ்மால்' பஸ்சில் ஏறி 'லார்ஜ்'...குட் காம்பினேஷன்...!
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?











Click it and Unblock the Notifications