காஜல் அகர்வால், செருப்புக் கால்... ஸ்மார்ட் ரேஷன் கார்டில் இப்போ விநாயகர்... அடுத்து? - வீடியோ
ஸ்மார்ட் ரேஷன் கார்டில் புகைப்பட குளறுபடிகள் தினம்தினம் அரங்கேறி வருகிறது. நடிகை காஜல் அகர்வால், செருப்புக் கால் புகைப்படத்துக்கு அடுத்து ஸ்மார்ட் ரேஷன் கார்டில் நல்லசிவம் என்பவருக்கு விநாயகர் படம் அச
திருப்பூர்: ஸ்மார்ட் ரேஷன் கார்டில் குடும்பத் தலைவரின் புகைப்படத்துக்கு பதிலாக விநாயகர் படம் அச்சிடப்பட்டுக் கொடுக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழக அரசு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத் துறையின் கீழ் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

உடுமலைப்பேட்டை அருகேயுள்ள வடுகபாளைஅத்தைச் சேர்ந்தவர் நல்லசிவம். அவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் ரேஷன் கார்டில், அவருடைய புகைப்படத்துக்கு பதிலாக விநாயகர் படம் அச்சிடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதையடுத்து நல்லசிவம் உணவு வழங்கல் துறை அதிகாரிகளை அணுகி, புகைப்படத்தை மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார். சேலம், ஓமலூரைச் சேர்ந்த சரோஜா என்பவருக்கு, நடிகை காஜல் அகர்வால் புகைப்படம் அச்சிடப்பட்டுக் கொடுக்கப்பட்டது.

அந்த சர்ச்சையின் பரபரப்பு அடங்குவதற்குள் தர்மபுரி, போசிநாயக்கன் அள்ளியைச் சேர்ந்த மகேஷ் என்பவருக்கு செருப்புக் கால் அணிந்த புகைப்படம் அச்சிடப்பட்ட ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டது.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் விநாயகர் படம் அச்சிடப்பட்ட ஸ்மார்ட் ரேஷன் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. கவனக்குறைவு இயல்பு தான் என்றாலும் நடிகை, விநாயகர் என அச்சிட்டுக் கொடுப்பது அதிர்ச்சியாக உள்ளது என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications